தமிழகத்தில் எங்கு திரும்பினாலும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான சம்பவங்களே நடந்து வருவது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆளும் திமுக அரசை, எதிர்க்கட்சிகள் வசைபாடி வருகின்றனர். இந்த சூழலில் திமுகவில் உள்ள கூட்டணி கட்சியான மநீம கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மநீம தலைவரும், எம்பியுமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சாந்தமா, கோபப்படாம இருந்துட்டா நதி சுத்தமாயிடுமா?
நல்லவங்கள்ளாம் கோபப்படாம இருக்கறதுனாலதான் இந்த மாதிரி சாக்கடையே ஓடுது…
இந்த மாதிரி சாக்கடையா வச்சிருக்கறதுனாலதான்… அவனவன் நானும் கொஞ்சம் ஒண்ணுக்கடிச்சா என்ன கெட்டுரும்… காறி துப்பினா என்ன கெட்டுரும்னு செஞ்சிக்கிட்டே இருக்கான்”

சமூக இழிவுகளைக் கண்டு மனம் வெதும்பி 32 ஆண்டுகளுக்கு முன்பு நான் மகாநதியில் வெளிப்படுத்திய கருத்து இது. இன்னும் நிலைமை மாறவில்லை. அந்தக் கோபம் என்னுள் தீரவில்லை.
பெண்களை, குழந்தைகளை பாதுகாக்க முடியாத சமூகத்தை நாகரீக சமுதாயமாக கருதவே முடியாது. அவர்கள் அச்சுறுத்தப்படும் சூழலில் எந்த வளர்ச்சிக்கும் அர்த்தமில்லை. எந்தப் பேச்சுக்கும் பொருளும் இல்லை என கூறியுள்ள கமல்ஹாசன், திமுக பெயரை கூட எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை.

