ஒரு காலகட்டத்தில் சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் ராஜாவாக கொடி கட்டி பறந்தவர் எம் ஜி ராமச்சந்திரன். அன்று முதல் இன்று வரை மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்த எம்ஜிஆர் அவர்களை பற்றி பல விஷயங்கள் திரையுலக பிரபலங்கள் புகழ்ந்து பேசி இருக்கிறார்கள்.
ஆனால், தற்பொழுது தெலுங்கு பிரபல தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் எம் ஜி ஆர் குறித்து மிகவும் அவதூறாக பேசி இருப்பது சினிமா வட்டாரங்கள் மட்டுமல்லாமல் பலரிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது, மறைந்த தெலுங்கு நடிகர் காந்தாராவ் கத்தி சண்டையில் மிகவும் சிறந்தார். அவருடைய திரைப்படங்கள் தமிழகத்தில் பெரிய வெற்றி அடைந்து இருக்கின்றன. அவரைப் பார்த்தால், எம்.ஜி.ஆர் பயந்து நடுங்கி விடுவார் என ராஜேந்திர பிரசாத் கூறியுள்ளார்.

இந்த நிலையில், தற்போது இதற்கு கண்டனம் தெரிவித்து நடிகர் விஷால் தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகர் ராஜேந்திர பிரசாத் சமீபத்திய கருத்துக்களை பார்க்கும் பொழுதும் கேட்கும்பொழுதும் மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
மேலும், வெறுப்பு ஊட்டுகிறது. காந்தாராவ் அவர்களை புகழ்ந்து பேசி இருந்தாலும், புகழ்பெற்ற நடிகர் எம் ஜி ஆர் ஐயா அவர்களை இழிவு படுத்தி குறைத்து மதிப்பிடுவது எங்கள் மக்களின் உணர்வுகளுக்கு சரியானது அல்ல.

அவர் இன்றும் என்றும் நினைவு கூறப்படுபவர். நீங்கள் இந்த விஷயத்தில் கண்டிப்பாக மன்னிப்பு கூற வேண்டும் என்று கூறியதற்கு என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால், நான் ஒரு நடிகராக இருந்து எதிர்காலத்தில் உங்கள் அளவிலான ஒரு நடிகரைப் பற்றி யாராவது தவறாக பேசினாலும், அதையே செய்வேன். நல்ல நம்பிக்கையுடன் கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்று விஷால் பதிவிட்டு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

