Close Menu
    What's Hot

    TVKவுக்கு தான்.. உனக்கு ஓட்டே வரலையே தம்பி.. பள்ளி மாணவரை கலாய்க்கும் நெட்டிசன்கள்..! (வீடியோ)

    April 3, 2026

    சிஎஸ்கே முதல் வெற்றியை ருசிக்குமா? பஞ்சாபை எதிர்கொள்ள பக்கா பிளான்..!

    April 3, 2026

    அலட்சியம், துரோகம்… வாழ்த்து கூறி விளாசிய அண்ணாமலை..!

    April 3, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • திரைப்பார்வை
      • ஓடிடி
      • பிரைம் டிவி
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • பேஷன்
      • கல்வி
      • வேலைவாய்ப்பு
    Utv PrimeUtv Prime
    Home»தமிழ்நாடு»கையாலாகாத திமுக இனி ஒரு நிமிஷம் கூட ஆட்சியில் இருக்கக்கூடாது… அன்புமணி காட்டம்!
    தமிழ்நாடு

    கையாலாகாத திமுக இனி ஒரு நிமிஷம் கூட ஆட்சியில் இருக்கக்கூடாது… அன்புமணி காட்டம்!

    Prime ReporterBy Prime ReporterMarch 12, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    The unruly DMK should not be in power for even a minute longer… Anbumani Kattam!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள், போதைப் பொருள் புழக்கம், மது என சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் முற்றிலும் சீரழிந்துள்தாக அன்புமணி கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், சென்னையில் கல்லூரி மாணவியை மர்ம கும்பல் மகிழுந்தில் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருப்பதாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் படிப்பதற்காக வரும் மாணவிகளுக்குக் கூட பாதுகாப்பு அளிக்க திறனற்ற நிலையில் திமுக அரசு முடங்கிக் கிடப்பது கண்டிக்கத்தக்கது.

    திருச்சியிலிருந்து புராஜெக்ட் பணிக்காக திருச்சியிலிருந்து சென்னை வந்து விடுதியில் தங்கியிருந்த மாணவி, கடந்த 9-ஆம் தேதி வெளியில் செல்வதற்காக காத்திருந்த போது, மகிழுந்தில் வந்த ஒரு கும்பல் அவரைக் கடத்திச் சென்று முகத்தில் மயக்கப் பொடியை பூசி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதன்பின் சில மணி நேரம் கழித்து அவரை வேறு இடத்தில் இறக்கி விட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

    அதைத் தொடர்ந்து கடந்த 10-ஆம் தேதி சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவம் பெற்று திரும்பிய மாணவியை அதே கும்பல் மீண்டும் மகிழுந்தில் கடத்திச் சென்று நடந்த கொடுமை குறித்து வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டியதாகவும் தெரிகிறது. மாணவி கடுமையாக மிரட்டப்பட்டிருப்பதால் மேலும் பல தகவல்களை தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

    சென்னை பாதுகாப்பான நகரம் என்பதால் தான் பெற்றோர் தங்களின் குழந்தைகளை நம்பி சென்னைக்கு அனுப்புகின்றனர். ஆனால், மாணவியை பட்டப்பகலில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யும் நிலைநிலவுகிறது என்றால் தமிழ்நாட்டில் நடப்பது ஆட்சியா, காட்டாட்சியா? என்ற ஐயம் தான் எழுகிறது. தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமைகள் நடக்காத நாள்களே இல்லை என்று கூறும் அளவுக்கு சட்டம் – ஒழுங்கு நிலைமை மோசமடைந்துள்ளது.

    The unruly DMK should not be in power for even a minute longer… Anbumani Kattam!

    ஆனால், இதுபற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் கடைசி நேரக் கொள்ளையிலும் கொண்டாட்டங்களிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது இந்தக் கையாலாகாத அரசு. மக்களைக் காப்பதற்கு துப்பற்ற திமுக அரசு இனி ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கக் கூடாது. இந்த ஆட்சி தொடர்ந்தால் தமிழ்நாட்டில் பெண்களும், குழந்தைகளும் நடமாடவே முடியாது. இன்னும் சில நாள்களில் இந்த அரசு விரட்டியடிக்கப்படுவதை வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் உறுதி செய்வார்கள். இவ்வாறு அவர் வன்மையாக கண்டித்துள்ளார்.

    Anbumani CM Stalin crime DMK Politics அரசியல் அன்புமணி குற்றம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    TVKவுக்கு தான்.. உனக்கு ஓட்டே வரலையே தம்பி.. பள்ளி மாணவரை கலாய்க்கும் நெட்டிசன்கள்..! (வீடியோ)

    April 3, 2026

    அலட்சியம், துரோகம்… வாழ்த்து கூறி விளாசிய அண்ணாமலை..!

    April 3, 2026

    முந்திரிக்கொட்டை மாதிரி முந்தியதால் வந்த வினை.. பாஜகவில் இருந்து அதிரடி நீக்கம்!

    April 3, 2026

    மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டது திமுக.. விஜய் முதல்வராவார்.. ஆதவ் அர்ஜூனா நம்பிக்கை!

    April 3, 2026

    கோவை அருகே 20 நாட்களாக சுற்றும் சிறுத்தை… வீடியோ போட்டு அறிவுறுத்திய அண்ணாமலை!

    April 3, 2026

    திரும்பத் திரும்ப பொய் சொல்றீங்க முதல்வரே.. அபத்தமான அவதூறு.. நயினார் கண்டனம்!

    April 2, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    TVKவுக்கு தான்.. உனக்கு ஓட்டே வரலையே தம்பி.. பள்ளி மாணவரை கலாய்க்கும் நெட்டிசன்கள்..! (வீடியோ)

    April 3, 2026

    “என் ஓட்டு விஜய்க்குத்தான்” எனப் பள்ளி மாணவர் ஒருவர் பேசிய வீடியோ வைரலான நிலையில், அந்த மாணவரின் அறியாமையைச் சுட்டிக்காட்டி இணையவாசிகள் கிண்டல் செய்து வருகின்றனர்.

    சிஎஸ்கே முதல் வெற்றியை ருசிக்குமா? பஞ்சாபை எதிர்கொள்ள பக்கா பிளான்..!

    April 3, 2026

    அலட்சியம், துரோகம்… வாழ்த்து கூறி விளாசிய அண்ணாமலை..!

    April 3, 2026

    முந்திரிக்கொட்டை மாதிரி முந்தியதால் வந்த வினை.. பாஜகவில் இருந்து அதிரடி நீக்கம்!

    April 3, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.