தற்போது மெட்ராஸ் எனப்படும் விழி வெண்படல அலர்ஜி வேகமாக பரவி வரும் நிலையில், அதிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும். மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய குறிப்புகள்.
- மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் நீங்களாகவே மருந்து கடைகளில் சொட்டு மருந்துகளை வாங்கி பயன்படுத்த வேண்டாம். இது பாதிப்பை தீவிரப்படுத்தும்.
- கண்கள் சிவந்து காணப்பட்டால் அல்லது பாதிப்பு இருந்தால் காண்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு சாதாரண கண்ணாடியை அணிவது சிறந்தது.
- மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்பட்ட அல்லது குணமடையும் வரை பள்ளி அலுவலகம் அல்லது பொது இடங்களுக்கு செல்லாமல் வீட்டிலேயே இருப்பது மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க நாம் செய்யும் பெரிய உதவி.

- பாதிப்பு ஏற்பட்டவர்கள் கருப்பு கண்ணாடி அணிவது கண்கள் கூசுவதை தடுப்பதோடு மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் பரவும் வாய்ப்பை தடுக்கலாம்.
- மெட்ராஸ் ஐ பாதிப்பு உள்ளவர்களிடமிருந்து சற்று தள்ளி இருப்பது நல்லது. அவர்கள் பயன்படுத்திய பொருட்களை தொட நேர்ந்தால் உடனடியாக உங்கள் கைகளை சுத்தப்படுத்தவும்.
- ஒருவேளை மெட்ராஸ் பாதிப்பு ஏற்பட்டால் சுத்தமான பஞ்சு அல்லது மென்மையான துணியை வெதுவெதுப்பான நீரில் நனைத்து கண்களை துடைக்கவும்.

- ஒரு கண்ணை துடைத்த பஞ்சை மறுக்கண்ணுக்கு பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. நீங்கள் பயன்படுத்தும் மேக்கப் பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது சிறந்தது.
- உங்கள் கைகளால் கண்களை தேய்ப்பதோ அல்லது அடிக்கடி தொடுவதோ கூடாது. கிருமிகள் கைகள் மூலமாகவே கண்களுக்கு எளிதில் பரவுகின்றன.
- வெளியில் சென்று வந்தாலோ அல்லது பொது இடங்களில் தொட்டாலும், சோப்பு போட்டு கைகளை நன்கு கழுவுவதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
- கண்கள் வழக்கத்தை விட சிவப்பாக மாறும் கண்களில் உறுத்தல் மற்றும் எரிச்சல் போன்றவை ஏற்படும்.

- கண் இமை ஓரங்களில் இருந்து அழுக்கு வெளியேறும்.
- கண்களில் அடிக்கடி நீர் வடிவதுடன் எதிரில் உள்ளவற்றை பார்க்க சிரமம் ஏற்படும்.
- வெளிச்சத்தை பார்ப்பதில் சிரமங்கள் எழலாம்.
- மேற்குறிர்கள் இல்லாவிட்டாலும் மெட்ராஸ் ஏற்படலாம். எனினும் பாதுகாப்பாக இருப்பது முக்கியம்.
- மெட்ராஸ் ஐ பாதித்தவர்களின் கண்களை நேருக்கு நேர் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
- கண்களில் எரிச்சல், உறுத்தல் ஏற்பட்டால் கண்களை கைகளால் கசக்குவதை தவிர்க்க வேண்டும்.
- முகத்தை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். தொடர்ந்து கண் எரிச்சல், சிவத்தல் போன்ற அறிகுறிகள் இருந்தால் கண் மருத்துவரை அணுகுவது நல்லது.

