80,90களில் தமிழே தெரியாமல் நடிக்க வந்து ஒட்டு மொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்தவர் குஷ்பூ. இவருக்கு கோவில் கட்டிய கதை எல்லாம் உண்டு. பார்க்க பப்ளியாக இருக்கும் குஷ்புவை கொண்டாடும் வகையில், அவரது காலகட்டத்தில் குஷ்பு இட்லி, குஷ்பூ கொண்டை, குஷ்பூ ஜாக்கெட், குஷ்புவிற்கு கோவில் குஷ்பு கம்மல் என நிறைய விஷயங்கள் வைரலானது.

அவரைப் போலவே நடிகை ஹன்சிகாவின் தோற்றம் காணப்பட்டதால், அவர் சின்ன குஷ்பு என அழைக்கப்பட்டார். ஆனால், திடீரென தனது உடல் எடையை குறைத்து குஷ்பு ஆளே மாறிவிட்டார். கடந்த நாலு வருடங்களாக அதிகப்படியான தன் உடல் எடையை அசாத்தியமாக குறைத்து இருக்கிறார்.

தொடர்ச்சியாக அவர் தோற்றத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் தெரிந்து வந்த நிலையில், எடை குறைப்பை தீவிரமாக சாத்தியப்படுத்தியது ஏன் என்பது குறித்து அவர் தெரிவித்துள்ளார். தனது உடல் எடை எப்படி குறித்து என்னவெல்லாம் பாலோ செய்வேன் என்று குஷ்பூ சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அதில் எனக்கு இப்போது வரை ரத்த அழுத்த பிரச்சனையும், சர்க்கரை நோயும் கிடையாது. ஆனால், என் அம்மாவுக்கு ரத்த அழுத்தமும் இருக்கிறது. எனவே எனக்கும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று சொன்னார்கள். ஏற்கனவே, மரபு காரணமாக எனக்கு ஒற்றைத் தலைவலி, சைனஸ் போன்ற பிரச்சனைகள் இருக்கின்றன.

எனவே, கூடுதலாக எந்த பிரச்சினையும் வந்துவிடக் கூடாது என ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினேன். யானை மாதிரி ரவுண்டா என் முகம் இருந்தது. கடைசியில் மூட்டு வலி போகணும்னு வெயிட்டை குறைக்க முயற்சி பண்ணியே ஆகணும்னு சொல்லிட்டாங்க. கொரோனா காலகட்டத்தில் வெயிட் குறைக்க ஆரம்பித்தேன் என அந்த பேட்டியில் குஷ்பூ தெரிவித்துள்ளார்.

