விஜயின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த விவாகரத்து மனுவில் விஜய் மீது பல குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். இதனை அடுத்து, விஜய், திரிஷா இணைந்த வீடியோ இணையதளத்தில் சமீபத்தில் வெளியாகி பலரும் வன்மையாக கண்டித்தனர்.

அந்த வகையில், பிரபல youtube சேனலுக்கு பேட்டி அளித்த நடிகை காஜல் பசுபதி விஜய் திரிஷாவுடன் திருமணத்திற்கு வந்ததை பார்த்து உங்களின் ரசிகையாக இருப்பதை நினைத்து நான் அசிங்கப்படுகிறேன். விஜய் ஒரு ஃபிளாப் ஹீரோவாக இருக்கும்போதே அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் சங்கீதா. அவர் சாதாரணமானவர் இல்லை.

அப்போதே, கோடீஸ்வரி ஃபிளாப் ஹீரோ என ஒட்டுமொத்த சினிமாவும் அவரை வசைப்பாடிய போது அவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட சங்கீதாவை இப்போது, நீங்கள் உச்சத்தை அடைந்து விட்டீர்கள் என்பதற்காக கழட்டி விடலாமா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும், சங்கீதா ஐந்து ஆண்டுகளாக போராடிக் கொண்டிருக்கிறார். சங்கீதாவை மறந்துட்டாரு, ஒன்லி திரிஷா மட்டுமா? இன்னும் நிறைய பேர் இருக்காங்களான்னு தெரியல, இவை அனைத்தும் கண்ணுக்கு மறைவாக இருக்கும் வரை யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், பொது நிகழ்ச்சிகளில் ஜோடி போட்டு வந்து எதை நிரூபிக்க விரும்புரிங்க, எங்க அண்ணா விஜய் அப்படி இல்லை திரிஷா அவரின் தோழிதான் என சொன்ன எங்களுக்கு எல்லாம் அப்போ செருப்பில் அடித்தது போல் இருக்கிறது என்று ஆதங்கத்துடன் அந்த பேட்டியில் பேசியுள்ளார்.

