குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து அதன் பின் ஹீரோயினாக சினிமாவில் களமிறங்கியவர் அபிராமி. இவர் தமிழில், வெளிவந்த வானவில், மிடில் கிளாஸ் மாதவன், விருமாண்டி, தோஸ்த், சமஸ்தானம் போன்ற படங்களில் உச்ச நடிகர்களுடன் நடித்துள்ளார் அபிராமி.

அபிராமி என்றவுடன் நம் நினைவுக்கு உடனடியாக வருவது கமலின் விருமாண்டி படம் தான். இப்படத்தில், கமலஹாசனுக்கு ஜோடியாக நடித்து அனைவரின் மனதிலும் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டார் அபிராமி.

தமிழ்நாடு மட்டுமின்றி கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளிலும் நடித்து தென்னிந்திய அளவில் தனக்கு என்றும் தனி அடையாளத்தையும், ரசிகர்களையும் வைத்துள்ளவர் அபிராமி. இவர் சமீபத்திய புகைப்படங்கள் தற்போது, இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. காரணம் அபிராமி தனது உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறி உள்ளார்.

