வீட்ல இருக்குறவங்க எல்லாரும் ஏதாவது சாப்பிட கேட்டா அதுவும் குழந்தைகள் இருந்தா நிச்சயமா இந்த ஸ்நாக்ஸ கேட்டுக்கிட்டே இருப்பாங்க, திரும்பத் திரும்ப செய்ய சொல்லி உங்கள நச்சுக்கிட்டு இருப்பாங்க. இனிப்பு ரவை போண்டா எப்படி செய்யறதுன்னு தான் இந்த பதிவுல நாம பாக்க போறோம்.
தேவையான பொருட்கள்
- இரண்டு கப் தண்ணீர்
- உப்பு சிறிது
- இரண்டு பிரியாணி இலை
- 3 டேபிள் ஸ்பூன் சர்க்கரை
- ஒரு கப் ரவை
உள்ளே வைப்பதற்கு
- கால் கப் பொடித்த வெல்லம்
- ரெண்டு டேபிள் ஸ்பூன் தண்ணீர்
- ஒரு கப் துருவிய தேங்காய்
- ஒரு டீஸ்பூன் சர்க்கரை
- கால் டீஸ்பூன் ஏலக்காய் தூள்
- பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்
செய்முறை
Step 1: ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் நீரை ஊற்றி ஒரு சிட்டிகை உப்பு மற்றும் பிரியாணி இலை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின்னர், அதில் சர்க்கரையை சேர்த்து சர்க்கரை கரைந்ததும் ரவையை சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
Step 2: ரவையானது நன்கு வெந்து சுருண்டு வந்ததும், அதை இறக்கி ஒரு தட்டில் போட்டு கை பொறுக்கும் சூடு வரும் வரை பொறுத்து இருக்க வேண்டும். குறிப்பு, குளிர வைக்க வேண்டாம்.
Step 3: பிறகு ஒரு வானொலியை அடுப்பில் வைத்து அதில் பொடித்த வெள்ளத்தை சேர்த்து அத்துடன் இரண்டு டேபிள்ஸ்பூன் மட்டும் நீரை ஊற்றி வெல்லத்தை கரையவிட வேண்டும். வெல்லம் நன்றாக கரைந்ததும். அதில், துருவிய தேங்காய்களை சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
Step 4: பின்னர் அதில், சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி குளிர வைக்க வேண்டும். அடுத்து, ரவையை நன்கு கொழுக்கட்டை மாவு பதத்திற்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும். பின்பு பிசைந்த சிறிது ரவையை எடுத்து உருட்டி தட்டையாக தட்டி நடுவே சிறிது தேங்காய் கலவையை வைத்து மடித்து ஓரளவு தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும்.
Step 5: இதே போன்று மீதமுள்ள அனைத்து மாவையும் செய்து கொள்ள வேண்டும். இறுதியாக ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில், பொறிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் தயாரித்து வைத்துள்ள அனைத்தையும் மிதமான தீயில் வைத்து முன்னும் பின்னும் ஆக பொன்னிறமாக ஃப்ரை செய்து எடுத்தால் சுவையான அருமையான ஸ்வீட் ரவா போண்டா ரெடி.

