ஹாலிவுட் வரை ரீச் ஆகியிருக்கும் நடிகர் தனுஷ் இவர் நடிப்பில் அடுத்ததாக கர என்கிற திரைப்படம் வெளியாக உள்ளது. இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

முன்னதாக நடிகர் தனுஷ், D55 என்ற பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தனுஷ் தயாரிக்க, இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். ஆக்ஷ்ன் அதிரடி படமாக உருவாகி வரும் இந்த படத்தில், ஸ்ரீலீலா, சாய் பல்லவி நடிக்கின்றனர். முக்கிய வேடத்தில் மம்மூட்டி நடிக்க, சாய் அபயங்கர் இசை அமைக்கிறார்.

இந்த இரண்டு படங்கள் மட்டுமில்லாமல் தனுஷின் கைவசம் உள்ள அடுத்த படம் தான் D56 இப்படத்தை லப்பர் பந்து இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கி வருகிறார். இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இப்படத்தில், தனுசுடன் இணைந்து தென்னிந்திய சென்சேஷனல் நடிகையான ருக்மணி வசந்த் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதன் மூலம் முதன்முறையாக தனுசுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இயக்குனர் விஜயகுமார் இப்படத்தில் வில்லனாக நடிக்க விருப்பவதாகவும், அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க போவதாகவும் கோலிவுட்டில் முணுமுணுக்கப்பட்டு வருகிறது.

