Close Menu
    What's Hot

    ஆப்பிளின் அடுத்த ‘மாஸ்டர் பிளான்’! 2026-ல் வெளியாகும் iPhone Fold: மூன்று அதிரடி மாற்றங்கள் என்னென்ன?

    April 5, 2026

    ஏப்ரல் 5: உங்கள் ராசிக்கு இன்றைய நாள் எப்படி இருக்கும்?.. திடீர் பணவரவு யாருக்கு?..

    April 5, 2026

    இந்தியா-ஈரான் கச்சா எண்ணெய் ஒப்பந்தம்: பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு!

    April 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»அழகு & பேஷன்»முகப்பரு தொல்லையா? கிள்ளாதீங்க.. இதோ வீட்டிலேயே சரிசெய்யும் சிம்பிள் டிப்ஸ்..!
    அழகு & பேஷன்

    முகப்பரு தொல்லையா? கிள்ளாதீங்க.. இதோ வீட்டிலேயே சரிசெய்யும் சிம்பிள் டிப்ஸ்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 10, 2026Updated:March 10, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    pimples UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பொதுவாக பெண்கள் பலரும் பிரச்சனையாக நினைப்பதும், முகத்தின் அழகை கெடுப்பதும் முகப்பருக்கள். இதற்காக, பெண்கள் பலரும் அழகு சிகிச்சைகளை செய்து கொள்கிறார்கள். ஆனால் பருவநிலை மாற்றம், ஹார்மோன் பிரச்சனைகள் உடலில் மாற்றம். உணவு பழக்க வழக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், முகப்பருக்கள் ஏற்படுகிறது.

    pimples UTv

    Table of Contents

    • வேப்பிலை
    • மஞ்சள்
    • ரோஸ் வாட்டர்
    • சந்தனம்
    • கற்றாழை
    • உணவுகள்

    இவற்றுள் சருமத்தில் எண்ணெய் பசை அதிகரிப்பு கிருமி தொற்று ஹார்மோன் சுரப்பு உள்ளிட்டவை முக்கிய காரணிகளாக கருதப்படுகிறது. சிலர் முகப்பருக்களை கைகளால் கொண்டு அடிக்கடி தொடுவார்கள்.

    pimples UTv

    மேலும், அவற்றை கிள்ளி எரிந்து விடுவார்கள். இது மிகவும் தவறானது. அவ்வாறு செய்வதால், முகப்பருக்கள் சருமத்தின் மற்ற பகுதிகளுக்கு பரவக்கூடும். இதனுடைய, தொற்று முற்றிலும் பரவக்கூடிய ஒன்று.

    pimples UTv

    முகப்பருக்களின் மீது கை வைக்கக்கூடாது. சருமத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். வெளியில் சென்று வந்த பிறகு கண்டிப்பாக முகத்தை நீரினால் கழுவ வேண்டும். சருமத்தில் உள்ள எண்ணெய் செயல் நீக்க வேண்டும். அதிக எண்ணெய் பசை சருமத்தில் சேராதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

    face wash water UTV

    முகத்தை தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். சோப்பு, கிரீம் கொண்டு அல்லது வெறும் தண்ணீரால் கழுவி முகத்தை சுத்தமான துணியை பயன்படுத்துவது சிறந்தது. வெயிலில் சென்றால், சன் ஸ்கிரீம்களை பயன்படுத்தலாம்.

    face wash water UTV

    மேலும், தேவையற்ற ரசாயன பொருட்களை சருமத்தில் பயன்படுத்துவதை தடுப்பது சிறந்தது. உங்கள் சருமத்திற்கு ஏற்றவாறு சோப்பு, ஃபேஸ் வாஷ் அல்லது கிரீம்களை தேர்வு செய்து பயன்படுத்துங்கள். பயன்படுத்தும் உடைகள் குறிப்பாக தலையணை, டவல் ஆகியவற்றை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.

    வேப்பிலை

    Neem leaves utv

    முகப்பொருட்களை விரட்ட வேப்பிலை சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது. வேப்பிலை அரைத்து முகத்தில் பேஸ் பேக்காக போட்டு பயன்படுத்தலாம்.

    மஞ்சள்

    turmeric utv

    அடுத்ததாக, முகப்பருக்களை விரட்ட மஞ்சள் சிறந்து தினமும் காலை, மாலை இரு நேரங்களில் முகத்தில் மஞ்சள் தடவி விட்டு குறிப்பாக பருக்கள் இருக்கும் பகுதியில் தடவி விட்டு 10 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். வேப்பிலையும், மஞ்சள் இரண்டையும் சேர்த்தும் பயன்படுத்தலாம்.

    ரோஸ் வாட்டர்

    Rose water UTv

    முகத்தை கழுவிய பின்னர் ரோஸ் வாட்டர் அல்லது பன்னீரை தடவி வர பருக்கள் இன்றி முகம் பொலிவுடன் இருக்கும். சருமத்தில் உள்ள அழுக்குகளும் நீங்கிவிடும்.

    சந்தனம்

    Sandalwood utv

    முன்னதாக, சந்தனத்திற்கு சருமத்திற்கு குளிர்ச்சி தரக்கூடிய பண்பு உள்ளது. உடல் வெப்பநிலை காரணமாக பருக்கள் வரலாம். மேலும், முகத்தில் சந்தனத்தை அப்ளை செய்து விட்டு சிறிது நேரம் கழித்து தண்ணீர் கொண்டு கழுவ சிறந்த பலனை அடையலாம்.

    கற்றாழை

    Aloe vera UTv

    கற்றாழை சருமத்துக்கு மிகவும் நல்லது. இது சருமத்திற்கு குளிர்ச்சியை தருவதுடன் முகப்பருக்களை சரி செய்கிறது. இது போன்ற வழிமுறைகளையும் பின்பற்றி முகப்பருக்கள் குறையவில்லை. எனில், சரும மருத்துவரை அணுகுவது சிறந்தது.

    உணவுகள்

    • முகப்பருக்களை விரட்ட சில உணவுகளை சேர்த்துக் கொண்டால் போதும். சருமத்திற்கு பொழிவு தரும் காய்கறிகள் பழங்களை சாப்பிட வேண்டும்.
    • தினமும் ஒரு ஆரஞ்சு பழம் அல்லது ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸ் பருகலாம். இது சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்குகிறது. கொய்யா, பப்பாளி, மாதுளை உள்ளிட்ட பழங்களை சாப்பிடலாம்.
    • பாதாம், அக்ரூட் பருப்புகள், முந்திரி, பிஸ்தா ஆகிய ஒமேகா3 அமிலங்கள் கொண்ட நட்ஸ் வகைகளை தினமும் சிறிதளவு எடுத்துக் கொள்ளலாம்.
    juice UTv
    • தினமும் ஒரு கேரட் அல்லது ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் சாப்பிடலாம். கீரை, முட்டைகோஸ், பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு ஆகியவற்றை காய்கறிகளாக எடுத்துக் கொள்ளலாம்.
    • உடல் சூடாக இருப்பதால் முகப்பருக்கள் வருகிறது. எனவே, உடல் சூட்டை தணிக்க கூடிய உணவு வகைகளை அதிகப்படியாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
    coconut water UTV
    • குறிப்பாக மோர், இளநீர் ஆகிய ஆகாரங்களை குடித்து வர கொழுப்புகள் நிறைந்த உணவுகள்.
    • எண்ணெய் பொருட்கள், எண்ணெயில் பொறித்த உணவுகளை உண்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். சாக்லேட், ஐஸ்கிரீம், வெண்ணை ஆகியவற்றை அளவோடு சாப்பிடுவது சிறந்தது.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTV Prime பொறுப்பாகாது.

    Acne home remedies Face acne solutions Oil control tips Pimples treatment tips சரும பராமரிப்பு குறிப்புகள் முகப்பரு பிரச்சனை முகம் சுத்தம் செய்வது
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வறண்ட சருமமா?.. இரவில் ‘இதை’ மட்டும் செய்யுங்கள்..!

    April 4, 2026

    உமிழ்நீரை தடவினால்.. தமன்னாவின் ஜொலிக்கும் சருமத்திற்கு இதுதான் காரணமா?..

    April 3, 2026

    ரசாயன கிரீம்கள் வேண்டாம்.. வலியின்றி முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க பாட்டி காலத்து டெக்னிக்ஸ்..!

    March 31, 2026

    எண்ணெய் சருமமா?.. எண்ணெய் பசை முகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் ரகசியம் இதோ..!

    March 21, 2026

    நீண்ட கூந்தல் வேண்டுமா?.. முடி கொட்டுவதை தடுத்து கூந்தலை வளர்க்கும் வெந்தயம்..!

    March 19, 2026

    காலையா?.. இரவா?.. நீண்ட மற்றும் பளபளப்பான முடிக்கு எண்ணெய் தேய்ப்பதில் உள்ள சீக்ரெட்ஸ்..!

    March 14, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    வதந்திகளுக்கு ‘கூலான’ பதில்.. சமூக வலைதளங்களில் தீயாக பரவும் த்ரிஷாவின் பதிவு..!

    March 14, 2026

    முதலமைச்சர் வீட்டு பக்கத்தில் கல்லூரி மாணவிக்கு நடந்த கொடூரம்… அண்ணாமலை கிளப்பிய பரபரப்பு!

    March 12, 2026

    வாய்ப்பு தந்த இயக்குநரின் மகளின் படிப்பு செலவை ஏற்ற யோகி பாபு.. அந்த மனசு தான்..!

    March 4, 2026

    இளம் பெண்ணை எரித்த வழக்கு.. போலீசிடம் இருந்து தப்ப முயன்று மாவு கட்டு வாங்கிய இளைஞர்..!

    February 21, 2026

    மறுமணம் செய்யப் போவதாக வெளியான தகவல்.. முதல்முறையாக மனம் திறந்த மீனா.!

    February 20, 2026
    Don't Miss

    ஆப்பிளின் அடுத்த ‘மாஸ்டர் பிளான்’! 2026-ல் வெளியாகும் iPhone Fold: மூன்று அதிரடி மாற்றங்கள் என்னென்ன?

    April 5, 2026

    ஆப்பிள் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் இந்த ஆண்டு அறிமுகமாகிறது. இதில் உள்ள 3 முக்கிய மாற்றங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த முழு விவரம்.

    ஏப்ரல் 5: உங்கள் ராசிக்கு இன்றைய நாள் எப்படி இருக்கும்?.. திடீர் பணவரவு யாருக்கு?..

    April 5, 2026

    இந்தியா-ஈரான் கச்சா எண்ணெய் ஒப்பந்தம்: பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு!

    April 4, 2026

    ராஷ்மிகா கர்ப்பமா?.. வைரலாகும் இன்ஸ்டாகிராம் போஸ்ட்..!

    April 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.