டிரெண்டிங் இசையமைப்பாளர் மட்டுமல்ல தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத். இந்தியா முழுவதும் இவரது இசைக்கு ரசிகர்கள் உண்டு. 3 படத்தில் தொடங்கிய பயணம், ரஜினி, கமல், விஜய், அஜித், ஷாருக்கான் என பான் இந்தியா இசையமைப்பாளராக உருவாகியுள்ளளார்.

முன்னதாக அனிருத் தற்போது இந்திய அளவில் முன்னணி இசையமைப்பாளராக இருந்து வருகிறார். தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு, ஹிந்தி என பலமொழி படங்களிலும் அவர் இசையமைக்க தொடங்கியுள்ளார்.
அடுத்து அவர் அல்லு அர்ஜுனனின் 23வது படத்தில் இசையமைக்க இருப்பதாகவும், அந்த திரைப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. படத்திற்காக அனிருத் 25 கோடி ரூபாய் சம்பளமாக பெறுகிறார் என கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, பிரபல தெலுங்கு தயாரிப்பாளர்களில் ஒருவர் அனிருத்தை அணுகிய போது அவர் ரூபாய் 20 கோடி சம்பளம் கேட்டாராம். அதை கேட்டு, அவர் கடும் அதிர்ச்சியாகி விட்டாராம். மற்ற இசையமைப்பாளர்கள் கேட்பதை விட அனிருத் கேட்பது நான்கு மடங்கு அதிக சம்பளமாக இருப்பதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் முணுமுணுக்க படுவதாகவும், தெலுங்கு சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதனால், பல தயாரிப்பாளர்கள் அனிருத் குறித்து காட்டமாக பேசிக் கொள்கிறார்களாம்.

