ஊருக்குப் போகும்போது ட்ரெயின்ல இல்லனா பஸ்ல சாப்பிடுவதற்கு ‘கட்டு சோறு’ (Travel Food) ஒரு வரப்பிரசாதம். சீக்கிரம் கெட்டுப்போகாமல், அதே சமயம் ருசி குறையாமல் இருக்கும்.
பொதுவா நம்ம எத்தனையோ முறை வீட்டில் புளியோதரை செஞ்சிருப்போம். பாக்கெட் மசாலா முதல் பாட்டி சொன்ன ரெசிபி வர எல்லாமே ட்ரை பண்ணி பார்த்து இருப்போம். ஆனால், கோவிலில் கொடுக்கக்கூடிய அந்த புளியோதரை ருசி தனியா தெரியும். நல்லெண்ணையின் வாசனையில் இருக்கும் சாதம் ஒன்றோடு ஒன்று சேராமல் உதிரி உதிரியாகவும், அதே சமயத்துல மசாலா சாதத்தோடு ஊரியும் இருக்கணும். அதை எப்படி பாரம்பரிய முறைப்படி கட்டுசோறு செய்யலாம்னு இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சாதத்திற்கு
- இரண்டு கப் பச்சரிசி அல்லது புழுங்கல் அரிசி
- 3 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- உப்பு தேவைக்கேற்ப
புளிக்காய்ச்சல்
- ஒரு பெரிய எலுமிச்சை அளவு பழைய புளி
- அரை கப் நல்லெண்ணெய்
- ஒரு டீஸ்பூன் கடுகு
- இரண்டு டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு
- ஒரு டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 1/2 கப் வேர்க்கடலை
- 8 முதல் 10 காய்ந்த மிளகாய்
- இரண்டு கொத்து கருவேப்பிலை
- அரை டீஸ்பூன் பெருங்காயத்தூள்
- ஒரு சிறிய துண்டு வெல்லம்
சீக்ரெட் மசாலா
- அரை டீஸ்பூன் வெந்தயம்
- அரை டீஸ்பூன் மிளகு
- 2 டீஸ்பூன் தனியா
- ஒரு டீஸ்பூன் எள்
செய்முறை

Step 1: முதலில் அரிசியை நன்றாக கழுவி சாதத்தை வடித்துக் கொள்ள வேண்டும். சாதம் குழைந்து விடக்கூடாது. உதிரி உதிரியாக இருக்க வேண்டும். அதற்கு, அகலமான பாத்திரத்தில் கொட்டி அதில், இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெய் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மெதுவாக கிளறி ஆற விடவும். சாதம் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க இது உதவும்.
Step 2: பின்னர் ஒரு வெறும் வானொலியில் வெந்தயம், மிளகு, தனியா மற்றும் எள் ஆகியவற்றை தனித்தனியாக போட்டு சிவக்க வறுத்து எடுத்து கருகிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆறியதும், இதனை மிக்ஸி அல்லது ஆட்டுக்கல்லில் நைசாக பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
Step 3: வானொலியில் தாராளமாக நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கும் பருப்புகள் பொன்னிறமானதும், கரைத்து வைத்துள்ள கெட்டியான புளி கரைசலை உற்றவும். இதோடு உப்பு, பெருங்காயத்தூள் மற்றும் மஞ்சத்தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
Step 4: பச்சை வாசனை போய் எண்ணெய் திரிந்து மேலே மிதந்து வரும் வரை கொதிக்க வேண்டும். இந்த நேரத்தில், சிறிய துண்டு வெல்லத்தை சேர்க்க இது புளிப்பு, காரம், உப்பு மூன்றையும் சமன் செய்யும். புளிக்கரைசல் கெட்டியாக தொக்கு பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
Step 5: இப்போது, ஆறவைத்த சாதத்தின் மேல் தேவையான அளவு புளிக் கரைச்சலை உற்றி, பிறகு நாம் அரைத்து வைத்துள்ள வறுத்த பொடியை இரண்டு டீஸ்பூன் மேலே தூவவும். அதோடு, சிறிது பச்சை கருவேப்பிலை மற்றும் ஒரு டீஸ்பூன் பச்சை நல்லெண்ணெய் ஊற்றி சாதத்தை மெதுவாக கிளறவும், கிளறிய உடனே சாப்பிடுவதற்கு குறைந்தது 2 மணி நேரம் ஊற விட்டு சாப்பிட்டால் தான் அந்த கட்டுசோறு ருசி தெரியும்.
Step 6: சாதம் புளியை நன்கு இழுத்துக்கொண்டு, சாப்பிட அமிர்தமாக இருக்கும். இதை வாழை இலையில் கட்டி வைத்தால், 3 நாட்கள் ஆனாலும், கெடாது. டிராவல் டைமுக்கு இதுதான் பெஸ்ட்.

