தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜயின் தனிப்பட்ட வாழ்க்கை தற்போது, பல்வேறு சிக்கல்கள் நிரம்பியுள்ளது என்று சொல்ல வேண்டும். தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலகி அரசியலில் இறங்கினார். இந்த வருடம் வரும் தேர்தலில் இவரது கட்சி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.

அடுத்த முதலமைச்சர் விஜய் தான் என்று சொல்லும் அளவிற்கு தொண்டர்களும், ரசிகர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். விஜயின் வெற்றியை எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் இடியை இறக்கியது போல், மனைவி சங்கீதா எதிர்பாராத நிலையில், விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடி உள்ளார்.

முன்னதாக, நடிகர் விஜயின் குடும்ப வாழ்க்கை விவாகரத்து வதந்திகளால் சூழப்பட்டு உள்ளது. அனைவரும் அறிந்த விஷயம். அவரது மகன் ஜோசப் சஞ்சய் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது, ஜேசன் சஞ்சயின் செயல் ஒன்று கவனத்தை ஈர்த்திருக்கிறது. அவர் ‘சிக்மா’ என்ற படத்தை இயக்கி வருகிறார். அதன் இறுதிக்கட்ட வேலைகளில் இப்போது பிஸியாக உள்ளார். அந்த படத்தின் போஸ்டரில், இயக்குனர் என்ற இடத்தில் ஜேசன் சஞ்சய் S என்று தான் குறிப்பிடப்பட்டிருக்கிறதாம்.

S என்பது சங்கீதாவை கூறுவதாகும். இனிஷியலுக்கு கூட விஜய் வேண்டாம், தன் தந்தை இருக்கக் கூடாது என முடிவு செய்துவிட்டாரா என அனைவரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், தந்தையின் முதல் எழுத்தான J அல்லது V யை பயன்படுத்தாமல் இருந்திருக்கிறார் என இதன் மூலம் தெரிகிறது. இது குறித்து பலரும் உண்மையில் ஜேசன் சஞ்சய் பாவம் தான் என்றும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

