விஜய் மீது ஒவ்வொரு நாளும் விமர்சனங்கள் குவிந்து வருகிறது. அரசியலில் கால் பதித்துள்ள விஜய் மீது அவர் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
2021ல் இருந்தே பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், நடிகையுடன் திருமணத்தை மீறி உறவு வைத்துள்ளதாகவும், எனக்கு நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் அந்த நடிகை யார் என வெளியே சொல்லுவேன் என விஜய் மனைவி சங்கீதா கூறியிருந்தார்.

ஆனால் விஜய் இது பற்றி ஒரு வார்த்தை கூட வெளியில் சொல்லவில்லை, தான் உண்டு தனது அரசியல் பணி உண்டு, என அவர் தனது அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
ஒரு பக்கம் அரசியல் பணிகளில் கவனம் செலுத்தி வரும் விஜய், நேற்று முன்தினம் சினிமா தயாரிப்பாளர் கல்பாத்தி சுரேஷ் மகனின் திருமண நிகழ்ச்சிக்கு திரிஷாவுடன் ஒன்றாக பங்கேற்றது சர்ச்சையை கிளப்பியது.

விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவர் இப்படி செய்கிறாரா என நெட்டிசன்களும் கேள்வி எழுப்பினர். ஆனால் மொத்தத்தில் அரசியலில் விஜய்க்கு கெட்ட பெயரை உண்டாகும் விதத்தில் இப்படி செய்திகள் பரபரப்பபடுகிறது என ஒரு தரப்பினர் விஜய்க்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர்.

இந்த சூழலில், சங்கீதா மீண்டும் செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் விவாகரத்து மனு தாக்கல் செய்த பின் நீலாங்கரை வீட்டுக்குள் விஜய் என்னை அனுமதிப்பதில்லை, விஜய் தரப்பு வழக்கறிஞர்கள் தன்னை மிரட்டுவதாகவும், பிரிந்து செல்வது பற்றி விஜய் எதுவும் பேச மறுக்கிறார் என அடுக்கடுக்கான புகார்களை கூறியுளார்.

அரசியல் நிகழ்வில் பங்கேற்று வரும் விஜய், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எந்த விதமான விளக்கமோ, மறுப்போ எதுவும் தெரிவிக்காததால், அவர் வாய் திறந்தால் மட்டுமே உண்மை என்பது புரியும் என மற்றொரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் சங்கீதா கொடுமைக்கு ஆளாவதாக கூறியுள்ளார். மகளிர் தினத்தை நாம் அனைவரும் கொண்டாடி கொண்டு இருக்கிறோம். சங்கீதாவுக்கு, நியாயம் கிடைக்க வேண்டும் சங்கீதா போன்று யாரும் பாதிக்கப்படக்கூடாது என்று தெரிவித்துள்ளார். இவரது கருத்துக்கள் பலர் கவனத்தை ஈர்த்துள்ளது.

