பொதுவாக கர்ப்ப காலத்தில் தாய் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு மிக முக்கியமாகும். இந்த பாதுகாப்பு குறிப்பில் முக்கிய பங்கு வகிப்பது உணவுமுறை மாற்றமாகும். இதுவே, குழந்தை மற்றும் தாய்க்கு தேவையான ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அளிக்கக் கூடியதாக அமைகிறது.
எனவே, கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு என சில உணவுகள் கட்டாயமாக்கப்படும். சில உணவுகள் தவிர்க்க கூடியதாகவும் அமைந்திருக்கின்றன.

- கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்
- அண்ணாச்சி, பச்சை பப்பாளி, எல், சோயா பால் போன்றவற்றை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
- எனில் இவை கரு சுருக்கத்திற்கு வழிவகுக்கும்.
- அதிக பாதரசம் கொண்ட மீன்களையும் தவிர்க்க வேண்டும்.
- பொறித்த அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் நொறுக்கு தீனிகள் கார்பனேற்றம் செய்யப்பட்ட பானங்கள் போன்றவற்றையும் தவிர்க்கவும்.
- புகை பிடித்தல் அல்லது சுட்ட அசைவ உணவுகள் மற்றும் பாதி வேகவைத்த அசைவு உணவுகளை தவிர்ப்பது சிறப்பு.
- வேக வைக்காத பச்சை முட்டையை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
- காய்ச்சாதப்பாலில் பாக்டீரியாக்களின் பாதிப்பு இருக்கும். அதனால், இதை தவிர்க்க வேண்டும்.
- காபி, டீ, சாப்ட் ட்ரிங்க்ஸ் போன்ற கொஃபைன் கலந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
- முளைகட்டிய தானியங்களில் கண்களுக்கு தெரியாத பாக்டீரியாக்கள் இருக்க வாய்ப்புகள் அதிகம்.

- மது அருந்துவது தாய்க்கும் ஆபத்தை உண்டாக்கும்.
- கருப்பு திராட்சை வயிற்றில் உள்ள கருவின் உடல் சூட்டை அதிகரிக்கலாம்.
- உணவுகளை சூடு செய்தோ ஃப்ரிட்ஜில் வைத்தோ சாப்பிடவே கூடாது.
- சாலட் சாண்ட்விச் பர்கர் இவ்வித உணவுகளுக்கு நோ சொல்லுங்கள்.
- சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.
- பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை வாங்கி உண்ணக்கூடாது.
குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTV Prime பொறுப்பாகாது.

