விஜய் இமேஜை கெடுக்க திமுக முயற்சிக்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.
நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளார். கட்சி முதல் மாநாட்டிலேயே திமுக, பாஜக அரசை கடுமையாக விமர்சித்தார்.
இதனால் விஜய்க்கு ஆதரவு அதிகமானது. இளைஞர்கள் மத்தியில் விஜய்க்கு மவுசு அதிகம் உள்ளது என்றும், அரசியலில் விஜய் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என சமீபத்திய கணிப்புகள் கூறின.
இதனிடையே தான் விஜய் மீது தினம் தினம் விமர்சனங்கள் வரத்தொடங்கியுள்ளன. காரணம், விஜய் மனைவி சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து மனுதான். 2021ல் இருந்தே பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு வைத்திருப்பதாக பகீர் கிளப்பினார்.
ஒரு புறம் விஜய் மீது விமர்சனங்கள் எழு, 2021ல் பிரிந்து வாழ்வது என்றால் அவர் அரசியலில் நுழைந்த பின்னர் விவாகரத்து மனு எதற்கு என்ற கேள்வியையும் முன் வைத்தனர்.
விஜய் தரப்பு இது குறித்து எந்த மறுப்பும் தெரிவிக்காத நிலையில், விஜய் மீது மீண்டும் மனைவி சங்கீதா புகார் அளித்தார். விஜய் தன்னை நீலாங்கரை வீட்டுக்குள் அனுமதிப்பதில்லை, பிரிந்து செல்வது குறித்து பேச மறுக்கிறார் என குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில் விஜய் விவாகரத்து தொடர்பாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர்,. விஜய் இமேஜை காலி செய்ய விவாகரத்து வழக்கில் திமுக சதி செய்வதாகவும், திமுக ஒரு மூழ்கும் கப்பல் என கூறியுள்ளார்.

