நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், அதற்கான சரியான டயட் கருப்பு கவுனி அரிசி தான். அதுவும், இந்த அரிசியை கொண்டு கஞ்சி தயாரித்து தினமும் காலையில் ஒரு கப் குடித்து வந்தால் உடல் எடையில் நல்ல மாற்றத்தை காணலாம்.
தேவையான பொருட்கள்
- 1 கப் கருப்பு கவுனி அரிசி
- 4 கப் தண்ணீர்
- 1 வெங்காயம் (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
- 3 பச்சை மிளகாய் (கீறியது)
- 1 கேரட் (துருவியது)
- 6 பல் (தட்டியது) பூண்டு
- 1 டீஸ்பூன் சீரகம்
- உப்பு சுவைக்கேற்ப
- 1 கைப்பிடி துருவிய தேங்காய்
- கொத்தமல்லி – சிறிது

செய்முறை
Step 1: முதலில் கருப்பு கவனி அரிசியை இரவு தூங்குவதற்கு முன்பு நீரில் இரண்டு முறை நன்கு கழுவி அதன் பின்னர், 4 கப் நீரை ஊற்றி குறைந்தது 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
Step 2: மறுநாள் காலையில் இந்த அரிசி நீரை வடித்து விட்டு தனியாக எடுத்து வைத்துக்கொண்டு அரிசியை மட்டும் ஜாரில் போட்டு சிறிது கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.

Step 3: பின்பு குக்கரில் அரைத்த அரிசியை சேர்த்து அத்துடன் தனியாக எடுத்து வைத்துள்ள அரிசி ஊற வைத்த நீரை ஊற்றி பிறகு அதில், நீளவாக்கில் மெலிதாக நறுக்கிய வெங்காயம், கீறி வைத்துள்ள பச்சை மிளகாய், துருவிய கேரட்டை சேர்க்க வேண்டும்.
Step 4: அதன் பின் அதில், தட்டி வைத்துள்ள பூண்டு பற்களை சேர்த்து ஒரு டீஸ்பூன் சீரகத்தை கைகளால் நன்றாக நசுக்கி சேர்த்து சுவைக்கு ஏற்ப உப்பு தூவி நன்கு கலக்க வேண்டும்.
Step 5: பின்னர், குக்கர் மூடி அடுப்பில் வைத்து மூன்றிலிருந்து நான்கு விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில், போனதும் குக்கரை திறந்து அதில் துருவிய தேங்காய் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்து கிளறினால் சுவையான கருப்பு கவுனி வெஜிடபிள் கஞ்சி தயார்.

