நடிகர் விஜய், சினிமாவை விட்டு விலகி அரசியலுக்குள் நுழைந்துள்ளார். தற்போது திமுக, பாஜகவை எதிர்த்து அரசியல் செய்து வரும் விஜய்க்கு எல்லாமே பிரச்னையாக அமைந்துள்ளது. கடைசி படம் ஜன நாயகன் வெளியாகாமல் கிடப்பில் உள்ளது. கூட்டணிக்கு விஜய் கட்சியுடன் எந்த கட்சியும் பேச்சு வார்த்தை நடத்தாததால் கடும் அப்செட்டில் விஜய் உள்ளார்.

இதனிடையே விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள விஷயம் காட்டுத்தீ போல பரவி விஜய் முகத்திரையை கிழித்துள்ளது. காரணம் அவர் மனைவி குறிப்பிட்டது நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவை விஜய் வைத்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
இந்த விஷயம் அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது. மேலும் தனக்கு நெருக்கடி கொடுத்தால் அந்த நடிகையின் பெயரை ஆதாரத்துடன் வெளியில் சொல்வேன் என சங்கீத கூறியுள்ளார்.

முன்னதாக, சங்கீதா தொடர்ந்து இருந்த வழக்கில் விஜய் ஒரு நடிகையுடன் தொடர்பில் இருக்கிறார் என குற்றம் சாட்டி இருந்தார். கடந்த பல வருடங்களாக விஜய் மற்றும் சங்கீதா பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், விஜயின் அடுத்த முடிவு என்ன என்பது பற்றி ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில், பிரபல தயாரிப்பாளர்கள் கல்பாத்தி சுரேஷ் மகன் திருமண நிகழ்ச்சிக்கு விஜய் மற்றும் திரிஷா இருவரும் ஒன்றாக வந்திருக்கின்றனர்.

சங்கீதாவின் விவாகரத்து சர்ச்சை முடிவதற்குள் விஜயும் திரிஷா ஒரே கலரில், ஒரே காரில் திருமண நிகழ்ச்சி ஒன்றாக பங்கேற்றுள்ளது தற்போது விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
#Thalapathy @TVKVijayHQ President #Vijay and #Trisha attend #KalpathiSSuresh – #MeenakshiSuresh 's son wedding reception @actorvijay @trishtrashers pic.twitter.com/iQOQet9Z0A
— Nikil Murukan (@onlynikil) March 5, 2026

