34 வயது பெண்ணிடம் அத்துமீறிய காவலர் சூர்யா என்பவர் மீது சென்னை மாநகர காவல் ஆணையர் கடும் நடவடிக்கை எடுத்துள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணி பகுதியான ஐஸ் ஹவுஸ் காவல் நிலையம் உட்பட்ட பகுதியில் தனிமையில் இருந்த 34 வயது மதிக்கத்தக்க பெண்மணியின் வீட்டுக்குள் போலீசார் சீருடையில் காவலர் சூர்யா அத்துமீறி நடந்துள்ளார்.
போதையில் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஐஸ் ஹவுஸ் காவல் நிலைய காவலரான சூர்யா என்பவர் மீது பாதிக்கப்பட்ட பெண்மணி ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ் தலைமையில் உரிய விசாரணை மேற்கொண்டு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு
தற்போது விசாரணையில் இருந்த காவலர் சூர்யா ஒழுங்கினத்தில் ஈடுபட்டதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

