தமிழகத்தில் கோடை காலம் தொடங்கிய நிலையில் பகல் நேரங்களில் வெயில் வாட்டி வருகிறது. பகலில் ஏற்படும் வெப்பத்தால் நண்பகல் நேரங்களில் மக்கள் வீட்டை விட்டு வராமல் நிழலை தேடி ஒதுங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு, கோவில்பாளையம், தாமரைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென மூடுபனி ஏற்பட்டது.
இந்த பணி பொழிவால் பொள்ளாச்சி கோவை தேசிய நெடுஞ்சாலையில் அந்த வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சென்றனர் .மேலும் முன்னே செல்லும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பணி இருந்ததால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
பகல் நேரத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்பட்ட வந்த நிலையில் இன்று அதிகாலை திடீரென பனி பொழி ஏற்பட்டு குளிர்ந்த சூழ்நிலை நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

