லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் லெஜெண்ட் சரவணன் சினிமாவில் நடிக்க முடிவெடுத்து முதல் படத்தை அவரை வைத்து பிரபல விளம்பர படங்களை இயக்கிய ஜேடி – ஜெர்ரி இயக்கினார்.
பெரிய பட்ஜெட்டில் இந்த படம் எடுக்கப்பட்டு பாலிவுட் ஹீரோயின் நடித்தாலும், ரசிகர்களிடம் பெரிதாக இந்த படம் ரீச் ஆகவில்லை. அதனை தொடர்ந்து, அந்த படத்தை பலரும் ட்ரோல் செய்து ட்ரோல் மெட்டீரியல் ஆக்கினர்.
ஆனால், அதற்கெல்லாம் துவண்டு போகாமல் இதே சினிமாவில் சாதித்து காட்ட வேண்டும் என எதிர்நீச்சல், காக்கி சட்டை, கருடன் படங்களை இயக்கிய RS செந்தில்குமார் இயக்கத்தில் தற்போது, லீடர் படத்தில் நடித்துள்ளார்.

அந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தனது மகனுடன் வாழ்வதற்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் போவேன் என லெஜெண்ட் சரவணன் டீசரில் மிரட்டி உள்ளார்.
லெஜெண்ட் சரவணனின் லீடர் படம் வேற லெவலில் பந்தயம் அடிக்கும் என்கிற நம்பிக்கையை விதைத்திருக்கிறது. லெஜெண்ட் சரவணனின் உழைப்பு இப்படத்தில் தெளிவாக தெரிகிறது. மேலும் இந்த லீடர் திரைப்படத்தில் ஆண்ட்ரியா ஷாம் சந்தோஷ் பிரதாப் ஹாய் ராஜ் குட் என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்களை இணைந்துள்ளனர்.

