கோலிவுட் ரசிகர்களின் உதாரண தம்பதிகளாக இருந்தவர்கள் அஜித் -ஷாலினி, சூர்யா -ஜோதிகா, இவர்களை ரசிகர்கள் கொண்டாடிய நிலையில் அதே இடத்தில் விஜயும் சங்கீதாவும் இருந்தார்கள்.
ஆனால், அதற்கெல்லாம் ஆப்பு வைக்கும்படி சங்கீதா மிகப்பெரிய குண்டை தூக்கி போட்டார். அதாவது, சில நாட்களுக்கு முன்பு அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனு தொடர்பாக பலர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஒரு நடிகையுடன் விஜய் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக அவர் குற்றச்சாட்டை முன்வைத்ததும், யார்? அந்த நடிகை என்று தேட ஆரம்பித்து விட்டனர் நெட்டிசன்கள். சிலரோ ஒரு நடிகையை குறிப்பிட்டு அவர்தான் சங்கீதா குறிப்பிடும் நடிகை என அடித்து சொல்லி வருகிறார்கள். மேலும், தங்களுடைய தலைவர் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டை வைக்கலாமா? என்றெல்லாம் சங்கீதா குறித்தும் புலம்பி வருகிறார்கள்.
பெண்களிடம் விஜய்க்கு இருக்கும் செல்வாக்கை குறைந்து விடுமோ என்ற அச்சமும் அவர்களுக்குள் எழுந்துள்ளது. அந்த அச்சத்தால், ஏற்பட்ட பதற்றத்தின் காரணமாக தற்போது, சங்கீதாவையே தரகுறைவாக பேசி வருகிறார்கள். மேலும், சங்கீதாவை இப்படி தளபதி ரசிகர்களே தரை குறைவாக பேசுவார்கள் என்று யாரும் நினைத்துக் கூட பார்க்கவில்லை.

முன்னதாக, தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே ஐயாசாமிபட்டி பிரிவு சாலையில் இன்று மதியம் நடைபெற உள்ள மக்கள் சந்திப்பு கூட்டத்தில் நடிகரும் தவெக தலைவருமான விஜய் என்ன பேசப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு தமிழகத்தில் உள்ள அனைவரிடத்தும் எழுந்துள்ளது.
காரணம் விவாகரத்து சர்ச்சை. இதற்கு பின்பு பெண்கள் மத்தியில் விஜயின் செல்வாக்கு குறைந்துவிடும் என பலரும் கணக்கு போட்டார்கள். ஆனால், அதையெல்லாம் சரி செய்ய அந்த விவாகரத்தை பற்றி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இன்று விஜய் நிச்சயம் பேசுவார் என்றும் அவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள பழியை சரி செய்ய முயல்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தெரிவித்த கருத்துக்கள் “இத்தனை நாள் தலைவர் ஸ்பீச் கேட்க ரொம்ப எதிர்பார்த்துகிட்டு இருப்போம். ஆனா, இந்த முறை தலைவர் ஸ்பீச்சுக்காக வெறித்தனமா வெயிட் பண்ணிட்டு இருக்கோம். ஏன்னா கடந்த ஒரு வருஷத்துல அவரை சுத்தி எழுந்த சர்ச்சைகளும் பொய் பிரச்சாரங்களுக்கும், அவதூறுகளுக்கும், ஆபாசங்களுக்கும் மிகப்பெரிய பதிலடியை தலைவர் கொடுப்பார் என நம்புகிறோம். வெயிட்டிங் ஃபார் தலைவர் தரிசனம் என விஜய் ரசிகர்களும் தொண்டர்களும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

