சக்கரவள்ளி கிழங்குல பாயசமா அப்படின்னு நீங்க அதிர்ச்சியாக வேண்டாம். சக்கரவள்ளி கிழங்கு கொண்டு பாயாசம் சுலபமாக எப்படி செய்வது என்று இந்த பதிவை பார்க்கலாம். சத்தானதும், ருசியானதும் கூட.
தேவையான பொருட்கள்
- ஒன்று (அ) இரண்டு சக்கரவள்ளி கிழங்கு
- அரை கப் நைலான் ஜவ்வரிசி
- 3 டேபிள் ஸ்பூன் நெய்
- மூணு கப் காய்சிய பால்
- அரை கப் சர்க்கரை
- கால் டீஸ்பூன் ஏலக்காய் தூள்
- 10 முந்திரிகள்
- 10 உலர் திராட்சைகள்
செய்முறை

Step 1: முதலில் நைலான் ஜவ்வரிசியை நீரில் 2 மணி நேரம் நன்றாக ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், சக்கரவள்ளி கிழங்கின் தோலை நீக்கிவிட்டு நன்றாக துருவி கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் மூன்று டேபிள் ஸ்பூன் நெய்யை ஊற்றி, நெய் சூடானதும் துருவிய சக்கரவல்லி கிழங்கை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
Step 2: அதன் பின்னர், அதில் ஊற வைத்த ஜவ்வரிசியை சேர்த்து கிளறி காய்ச்சிய பாலை ஊற்றி நன்றாக கிளற வேண்டும். சக்கரவள்ளி கிழங்கை நன்கு வேக வைக்க வேண்டும். மேலும், சக்கரவள்ளி கிழங்கு நன்கு வெந்ததும் அதில் சர்க்கரையை சேர்த்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
Step 3: பின்னர், ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு இரண்டு நிமிடம் வேக வைக்க வேண்டும். பாயாசம் சற்று கெட்டி பதம் வந்தவுடன் அடுப்பை அணைத்து விட வேண்டும்.
Step 4: இறுதியாக ஒரு சிறிய கடாயை அடுப்பில் வைத்து அதில் மூன்று டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி நெய் சூடானதும், முந்திரி மற்றும் உலர் திராட்சையை சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுத்து இறக்கி பாயாசத்துடன் சேர்த்து கிளறினால் சுவையான சக்கரவள்ளி கிழங்கு பாயாசம் தயார்.

