திருச்சி ரயில்வே நுழைவு வாயிலுக்கு இந்தி பெயர் வைக்கப்பட்டுள்ளதற்கு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவத்து வருகின்றனர்.
அந்த வகையில் முதலமைச்சர் ஸ்டாலின், திருச்சி மண்டல இரயில்வே அலுவலக நுழைவு வாயிலில் ‘கர்தவ்ய த்வார்’ என எழுதி வைத்துள்ளனர். இந்தித் திணிப்பு வெறியில் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது பா.ஜ.க.!பா.ஜ.க. அரசின் இந்தித் திணிப்பு: நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர் என கடுமையான விமர்சித்திருந்தார்.
இதற்கு எதிர்வினையாற்றிய தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, எப்போதெல்லாம் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, நீதிமன்றங்களில் கொட்டு வாங்கி, செய்யும் ஊழல் எல்லாம் வெளிவந்து, பொதுமக்கள் மத்தியில் திமுகவுக்கு எதிரான கடும் எதிர்ப்பு எழுகிறதோ, அப்போதெல்லாம், அறிவாலயத்தில் உள்ள ஒரு பழைய தகரப் பெட்டியைத் திறந்து, இந்த இல்லாத இந்தித் திணிப்பை எடுத்துக் காட்டு என்று உங்கள் தந்தை சொல்லிவிட்டுச் சென்றாரா?

இந்த ஏமாற்று அரசியல் அவர் காலத்தோடு முடிந்து விட்டது. இனியும் இந்த புளித்துப் போன காமெடி செய்து கொண்டிருக்காமல், நீங்கள் ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து பெருகியிருக்கும் ஊழல், கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள், போதைப் பொருள்கள் புழக்கம், என, உண்மையான மக்கள் பிரச்சினைகள் குறித்து எப்போது பேசப் போகிறீர்கள்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

