எண்பது தொண்ணூறுகளில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்த நடிகைகளின் ஒருவர் நடிகை அம்பிகா. இவர் அழகும் நடிப்பு திறமையும் கொண்டவர். பல மொழிகளில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்.

இவர் தனது தங்கை ராதாவுடன் இணைந்து ஒரு சில படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். ராதா குடும்பம் ஆன பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்க, அம்பிகா மட்டும் தொடர்ந்து படங்கள், சீரியல் என நடித்த வண்ணம் இருக்கிறார்.

இந்நிலையில், நடிகை அம்பிகா தற்போது விஜய் டிவியில் புதிய சீரியல் ஒன்றில் என்ட்ரி கொடுக்க இருக்கிறாராம். அதாவது, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிந்து பைரவி தொடரில் இன்றைய எபிசோடில் வர இருக்கிறாராம்.
வக்கீலாக அம்பிகா என்ட்ரி கொடுக்க இருக்கிறாராம். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதோ அந்த போட்டோ

