திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட மூன்றாவது மண்டலம் 58 வது வார்டு செட்டிபாளையம் பகுதியில், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் எட்டு லட்சம் செலவில், நிழற்குடை நேற்று முன்தினம் அமைக்கப்பட்டது.
இந்த நிகழ்விற்கு, கோவை பாராளுமன்ற உறுப்பினர் நராஜ்குமார் கலந்துகொண்டு நிழல் குடை அமைப்பதற்கான பூமி பூஜை பணியை துவக்கி வைத்தார் இந்த நிகழ்விற்கு அவர் வருவதை முன்னிட்டு அந்தப் பகுதியில் குண்டும் குழியுமாக, இருந்த சாலைகள் ஆனது அவசர கதியில் போடப்பட்டது போடப்பட்ட சாலைகளானது.
தரம் இன்றி போடப்பட்டுள்ளதால் தார் சாலைகளானது பெயர்ந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனைப் பகுதி பொதுமக்கள் வீடியோவாக பதிவு செய்து சமுக வலைத்தளங்களில் பதிவிட்டனர் தற்போது இந்த வீடியோவானது வைரலாகி வருகிறது.

