குணா குகையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் மஞ்சுமெல் பாய்ஸ். இந்த திரைப்படத்தின் இயக்குனர் சிதம்பரம். இவர் மலையாள திரையுலகில் மிகவும் திறமையான இயக்குனர்களில் ஒருவர். இப்படி இருக்கையில், இவர் மீது பெண் ஒருவர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள தெற்கு காவல் நிலையத்தில் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்தார் என்று புகார் அளித்திருந்தது.
இந்த விவகாரம் அனைவரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இயக்குனர் சிதம்பரம் தனது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து இவ்வாறு நடந்து கொண்டார் என்று தனது புகாரில் அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த 2022 ஆம் ஆண்டு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார். இவரது, இந்த புகார் குறித்த தகவல்கள் தற்போது மொத்த மலையாள மத்தியில் பேசு பொருளாக மாறி உள்ளது.
முன்னதாக, மஞ்சுமெல் பாய்ஸ் படம் வெளியான காலகட்டத்தில் இவர் மீது நிதி மோசடி வழக்கும் பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கு இப்போது வரை விசாரணையில் இருந்து வருகிறது.
அரவிந்த் என்பவர் கேரள நீதிமன்றத்தில் மனு அளித்ததன் அடிப்படையில், இயக்குனர் சிதம்பரத்தின் மீது மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பு நிறுவனமான பறவா ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

பட மோசடி, நடைபெற்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில், இயக்குனர் சிதம்பரத்தின் மீது தற்போது பாலியல் துன்புறுத்தல் புகார் கொடுக்கப்பட்டிருப்பதால் இது குறித்து பேச்சு பரவலாக பேசப்பட்டு உள்ளது.

