தென்னிந்திய சினிமாவில் மிகவும் முக்கியமான அதே நேரத்தில் முன்னணி நடிகையாக இருக்கக்கூடியவர் த்ரிஷா. இவர் கடந்த 24 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் ஜொலித்து வருகிறார். இவருக்கு என்று பெரும் ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.
எப்போதுமே, இவரது போஸ்ட்க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கவனமும் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், த்ரிஷா வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் போஸ்ட் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
தனது ரசிகர்களுக்கு எப்போதும் தனது அப்டேட்டுகளை சொல்லிக் கொண்டே இருக்கும் த்ரிஷா சமூகத்தில் நடைபெறும் சில அநீதிகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்துள்ளார். இப்படி இருக்கையில், நடிகை த்ரிஷா அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் விளையாட்டாகவும் நக்கலாகவும் ஒரு போஸ்ட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “நடக்காதுன்னு தெரியும் ஆனாலும் கேட்கிறேன் Get Ready With Me? Q&A?” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்தால் நடிகை த்ரிஷா அவரது சமூக வலைதளத்தில் லைப் வரப்போகிறார் என்பது போல் தெரிகிறது என்று சிலரும் த்ரிஷா விளையாட்டாக இப்படி போட்டுள்ளார் இன்றும் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

