நடிகை சௌந்தர்யா 1972 ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலம் கோலாரில் பிறந்தார். இவரது இயற்பெயர் சௌமியா சத்ய நாராயணா. இவர் கன்னடம், தமிழ், ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார்.
இவர் நந்தி விருது, கர்நாடகா அரசின் இரு மாநில விருதுகள், ஆறு பிலிம்ஸ் பெற்றவர். தமிழில் பொன்னுமணி, படையப்பா, அருணாச்சலம், சொக்கத்தங்கம், தவசி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து இருந்தார்.

ஹிந்தியில் சூர்யவன்ஷம் என்ற படத்தில் அமிதாப்பச்சனுடன் நடித்திருந்தார். இவரது, கடைசி படம் ஆப்தமித்ரா விஷ்ணுவர்தன், ரமேஷ் அரவிந்துடன் நடித்திருந்தார். ஏப்ரல் 17, 2004 அன்று ஒரு துயரமான விமான விபத்தில் காலமானார்.
அவர் தனது 31 வயதில் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முன்னதாக, சௌந்தர்யா அவரது சகோதரர் அமர்நாத் மேலும், இருவர் கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து ஒரு தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஹெலிகாப்டரில் தெலுங்கானாவில் உள்ள கரீம் நகருக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்து பெங்களூரில் உள்ள விவசாய அறிவியல் பல்கலைக்கழக வளாகத்தில் விழுந்து நொறுக்கியது.
இந்த விபத்தில், ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் ரசிகர்களுக்கும் உயிரிழந்தனர். இது பெரும் அதிர்ச்சியின் துயரத்தையும் ஏற்பட்டது. இறக்கும்போது அவர் கர்ப்பமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இது அவரின் ரசிகர்களின் துயரத்தை மேலும் அதிகப்படுத்தியது.

இவருடைய மரணம் தற்போது, வரை ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது. முன்னதாக, சௌந்தர்யாவின் கணவர் ரகு சௌந்தர்யாவின் மரணம் விபத்து அல்ல என்றும், திட்டமிட்ட கொலைதான் என்றும் புகார் கூட கொடுத்திருந்தார்.

இந்த நிலையில், இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்து வரும் பிரியங்கா மோகன் தமிழ், தெலுங்கு மொழிகளில் பிஸியாக படங்களில் நடித்து வருகிறார். பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பிரியங்கா மோகனிடம் யாருடைய பயோபிக்கில் நீங்கள் நடிக்க ஆசைப்படுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில், அளித்த அவர் மறைந்த நடிகை சௌந்தர்யாவின் பயோகத்தில் நடிக்க ஆசை என தெரிவித்துள்ளார்.

