Close Menu
    What's Hot

    ஆப்பிள் 50: பொன்விழா கொண்டாட்டத்தில் புதிய ‘ஏர்பாட்ஸ் மேக்ஸ் 2’!

    April 12, 2026

    பிரீமியர் லீக் அதிரடி: 5-வது இடத்தைப் பிடித்தாலும் சாம்பியன்ஸ் லீக் வாய்ப்பு உறுதி! ஜாம்பவான்கள் இடையே கடும் போட்டி!

    April 12, 2026

    ஏப்ரல் 12: ஞாயிறு அதிர்ஷ்டம் யாருக்கு? மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான துல்லியமான பலன்கள்!

    April 12, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»தமிழ்நாடு»பட்டியலின மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகள் நெருக்கடி.. வேடிக்கை பார்க்கும் திமுக? அன்புமணி விளாசல்!
    தமிழ்நாடு

    பட்டியலின மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகள் நெருக்கடி.. வேடிக்கை பார்க்கும் திமுக? அன்புமணி விளாசல்!

    Prime ReporterBy Prime ReporterFebruary 28, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    anbumani-condemns-dmk-over-medical-fee-issue
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பாமக செயல் தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் பட்டியலின, பழங்குடியின மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை மத்திய அரசே வழங்கும் நிலையில், ஐந்தாம் ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தை நான்காம் ஆண்டிலேயே கட்ட வேண்டும் என்றும், அவ்வாறு கட்டாத மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் எச்சரித்துள்ளன. இதைத் தடுக்க வேண்டிய தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தனியார் கல்லூரிகளுக்கு சாதகமாக நடப்பது கண்டிக்கத்தக்கது.

    மத்திய அரசின் உயர்கல்வி உதவித் தொகை (Post Matric Scholarship) திட்டத்தின்கீழ் தனியார் கல்லூரிகளில் மருத்துவம் பயிலும் பட்டியலின, பழங்குடியின மாணவர்களின் குடும்ப ஊதியம் ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால், அவர்களுக்கான கல்விக்கட்டணம் முழுவதையும் அரசே செலுத்தும். அதனால் இந்தக் கட்டணத்தை மாணவர்களிடம் தனியார் கல்லூரிகள் கேட்கக் கூடாது.

    முதல் நான்கரை ஆண்டுகளில் ஏதேனும் கல்லூரிகள் மாணவர்களிடம் கட்டணம் வசூலித்து இருந்தால், அந்தத் தொகையை சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கில் அரசே செலுத்தி விடும். ஆனால், ஐந்தாம் ஆண்டு கட்டணத்தை மாணவர்களிடம் கேட்கவே கூடாது என்பது தான் விதியாகும்.

    anbumani-condemns-dmk-over-medical-fee-issue

    ஆனால், தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள் ஐந்தாம் ஆண்டுக்கான கட்டணத்தை நான்காம் ஆண்டின் முடிவிலேயே கட்டி விட வேண்டும் என்றும், அவ்வாறு கட்டத் தவறினால் நான்காம் ஆண்டு தேர்வை எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளன. அதனால், மாணவர்களும், அவரது பெற்றோரும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

    விதிகளை மீறி கட்டணம் செலுத்தும்படி பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகள் நெருக்கடி கொடுக்கும் போது அதை தடுத்து நிறுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கும், மருத்துவக் கல்வி இயக்குனருக்கும் தான் உள்ளது.

    ஆனால், இதில் தாங்கள் செய்வதற்கு எதுவும் இல்லை; கட்டண நிர்ணயக் குழு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிக் கொண்டு மருத்துவக் கல்வி இயக்குனர் ஒதுங்கிக் கொண்டார். அதனால், கட்டணம் செலுத்த முடியாமல், தாங்கள் தேர்வு எழுத முடியுமா? என்பதும் தெரியாமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர்.

    சமூகத்தின் அடித்தட்டில் உள்ள சமூகங்களைச் சேர்ந்த மக்கள் மருத்துவக் கல்வி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இத்தகைய கல்வி உதவித்தொகைகளை மத்திய அரசு வழங்குகிறது.

    ஆனால், அதையும் தாண்டி பட்டியலின, பழங்குடியின மருத்துவ மாணவர்களை தனியார் கல்லூரிகள் கொடுமைப்ப்படுத்துவதை அனுமதிக்கக் கூடாது. இந்த விஷயத்தில் தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண்பதுடன், சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Anbumani Ramadoss DMK government criticism Post Matric Scholarship scheme SC ST students scholarship Tamil Nadu medical education news
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    தடுமாறி விழுந்த விஜய்.. காரைக்குடியில் கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல்; நிலைதடுமாறிய தளபதி..!(வீடியோ)

    April 10, 2026

    விஜய் வாகனத்தில் தொற்றிய தொண்டர்கள்.. பூட்ஸ் காலால் எட்டி உதைத்த சம்பவம்..!

    April 10, 2026

    ‘கை’ நழுவும் காங்கிரஸ்… தவெக பக்கம் ‘கை’ மாறிய தொகுதி.!

    April 10, 2026

    சோதனையில் சிக்கிய பணம்?.. விஜய் வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை..!

    April 10, 2026

    சைக்கிள் பயணத்தால் வந்த சிக்கல்?.. தேர்தல் ஆணைய கெடுபிடியால் மௌனம் காத்த விஜய்..!

    April 10, 2026

    மரணத்திற்கு பயப்படுபவன் அல்ல – சீறிய முதலமைச்சர்.. எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த பின்னணி..!

    April 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    வரி ஏய்ப்பு புகார்?.. 10 இடங்களில் ஒரே நேரத்தில் பாய்ந்த IT அதிகாரிகள் – ஜவுளிக்கடை மூடல்..!

    April 10, 2026

    சபரிமலை: விஷு கனி தரிசனத்திற்காக ஏப்ரல் 11-ல் நடை திறப்பு! உச்சநீதிமன்ற தெளிவுரை என்ன?

    April 9, 2026

    உலகப் பரபரப்பு: இஸ்லாமாபாத் ‘செரீனா’ ஹோட்டலில் அமெரிக்கா – ஈரான் வரலாற்றுப் பேச்சுவார்த்தை..!

    April 11, 2026

    2026 பராபவ வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்..!

    April 7, 2026

    2026 தமிழ்ப் புத்தாண்டு: உங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டிய எளிய பூஜைகள்!

    April 7, 2026
    Don't Miss

    ஆப்பிள் 50: பொன்விழா கொண்டாட்டத்தில் புதிய ‘ஏர்பாட்ஸ் மேக்ஸ் 2’!

    April 12, 2026

    ஆப்பிள் நிறுவனத்தின் 50-வது ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, புதிய ஏர்பாட்ஸ் மேக்ஸ் 2 விற்பனை தொடக்கம் மற்றும் M5 மேக் மினி வருகை குறித்த முக்கிய தகவல்கள்.

    பிரீமியர் லீக் அதிரடி: 5-வது இடத்தைப் பிடித்தாலும் சாம்பியன்ஸ் லீக் வாய்ப்பு உறுதி! ஜாம்பவான்கள் இடையே கடும் போட்டி!

    April 12, 2026

    ஏப்ரல் 12: ஞாயிறு அதிர்ஷ்டம் யாருக்கு? மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான துல்லியமான பலன்கள்!

    April 12, 2026

    ஹெல்த்டெக் & பயோடெக்: 2026-31 காலக்கட்டத்தில் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கும் ‘சூப்பர்’ துறைகள்!

    April 11, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.