பால்மணம் மாறாத மழலைகள் மீது தொடர்ந்து பாலியல் வேட்டை நடத்திய திமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளதற்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே, திமுக இளைஞர் அணி கிளைச் செயலாளராக இருக்கும் பெரியநாயகம் என்ற மிருகத்தின் பாலியல் வெறிக்கு, 2 வயது பெண் குழந்தை பலியாகியுள்ள செய்தியறிந்து எனது ஈரக்குலையே நடுங்குகிறது. பால்மணம் மாறாத மழலைகள் மீது தொடர்ந்து பாலியல் வேட்டை நடத்தும் கயவர் கூட்டத்தினைக் கூண்டோடு கொன்றொழித்து விடுமளவிற்கு கோபம் வருகிறது.
“திமுககாரன்” என்ற ஒற்றை அடைமொழியை வைத்துக் கொண்டு, உடல்ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் பெண்கள் மீது பாலியல் தாக்குதல்களைத் தொடுக்கும் உடன்பிறப்புகளைக் கட்டுப்படுத்த வேண்டிய திரு. ஸ்டாலின் அவர்கள், அவர்களுக்குக் கட்சிப் பதவி கொடுத்து தமது கூடாரத்திற்குள் கொண்டாடி மகிழ்வது வெட்கக்கேடானது. அரசியல் வேறுபாடுகளை எல்லாம் கடந்து, எனது ஆன்மாவின் அடி ஆழத்திலிருந்து நான் திமுகவை வெறுப்பதற்குக் காரணம் இதுதான்.

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து, தற்போது இரண்டு வயது குழந்தையிடம் தனது இச்சையைத் தீர்த்துக் கொள்ளுமளவிற்குத் தரம் தாழ்ந்து போன திமுகவினர், ஒட்டுமொத்த மனித இனத்திற்கே இழுக்கானவர்கள். இப்படிப்பட்டவர்களைக் கொண்ட கட்சியின் அடிச்சுவடு கூட இனி தமிழக அரசியலில் தெரியக் கூடாது என்பதே எனது வாழ்நாள் விருப்பம்! இவ்வாறு அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

