ஆந்திராவை சேர்ந்த நடிகர் விஜய் தேவரகொண்டாவும், கர்நாடகாவை சேர்ந்த டிரெண்டிங் நடிகை ராஷ்மிகாவும் திருமணம் செய்து கொண்டனர். படத்தில் நடித்த போது ஏற்பட்ட காதல், திருமணம் வரை கைகூடியுள்ளது. திருமணத்திற்கு டோலிவுட், பாலிவுட், கோலிவுட் பிரபலங்கள் வாழ்த்து கூறிய நிலையில், பிரதமர் மோடியும் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

திருமண புகைப்படங்களை வெளியிட்டுள்ள விஜய் தேவரகொண்டா, ஒரு நாள் அவளுடைய நினைவு என்னை வாட்டியது. அவள் என் அருகில் இருந்திருந்தால், நான் அந்த நாள் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று தோன்றும் அளவிற்கு ஒரு ஏக்கம் அவள் மீது இருந்தது.

அவள் எனக்கு எதிரே அமர்ந்து சாப்பிட்டு இருந்தால் அந்த உணவு இன்னும் நிறைவாக இருந்திருக்கும் என்று தோன்றியது. அவள் என்னுடன் இருந்திருந்தால், என் உடற்பயிற்சிகள் ஒரு தண்டனையாக தெரியாமல் இன்னும் உற்சாகமாக இருந்திருக்கும். நான் எங்கே இருந்தாலும், ஒரு அமைதியும் வீட்டில் இருந்திருக்கும், உணர்வையும் பெறுவதற்கு அவள் எனக்கு தேவைப்பட்டால் அதனால், என் உயிர் தோழியை என் மனைவியாக்கிக் கொண்டேன் என்று விஜய் தேவரகொண்டா பதிவிட்டுள்ளார்.

“விரோஷ்” என்று அழைக்கப்படும் இந்த ஜோடி தங்களது திருமணத்தை வெறும் ஆடம்பர நிகழ்வாக மட்டும் பார்க்காமல் தங்களது கலாச்சார வேர்களுக்கு மதிப்பளிக்கும் ஒரு உன்னத நிகழ்வாக மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதற்காக அவர்கள் இரண்டு வெவ்வேறு பாரம்பரியங்களின் படி திருமணம் செய்து கொள்ளும் முடிவை எடுத்தனர். திருமணத்தின் முதல் பகுதி காலையில் விஜய் தேவரகொண்டாவின் தெலுங்கு பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. மங்கள இசை மற்றும் வேத மந்திரங்கள் முழங்க தெலுங்கு பழக்கவழக்கங்களின்படி மங்கலசூத்திரம் கட்டுதல் மற்றும் சுமங்கலியம் போன்ற சடங்குகள் பக்தி பூர்வமாக நடந்தேறின.

எளிமையும், ஆன்மீகமும் நிறைந்த வேலையில், இரு குடும்பத்திலும் ஆசீர்வதித்தனர். மேலும், மாலை 4 மணிக்கு மேல் ராஷ்மிகாவின் பூர்வீகமான கர்நாடகாவின் குடகு மாவட்டத்தை பிரதிபலிக்கும் கொடவா பாரம்பரிய படி திருமணம் மீண்டும் நடைபெற்றது.
மற்ற திருமணங்களைப் போல அக்னி வளர்ப்பதோ அல்லது பூசாரிகள் மந்திரம் ஓதுவது இல்லாத இந்த திருமணம் முற்றிலும் பெரியவர்களின் ஆசீர்வாதத்தை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்றது.

மேலும், பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் வாளால் தேங்காய் வெட்டுவது போன்ற தனித்துவமான சடங்குகள் இந்த திருமணத்தில் கூடுதல் மெருகூட்டின. செயற்கையான அலங்காரங்களை தவிர்த்து உள்ளூர் மலர்கள் மற்றும் இயற்கை சார்ந்த கிராமிய எளிமையுடன் திருமண மேடை அலங்கரிக்கப்பட்டிருந்தது அனைவரையும் கவர்ந்தது.

விருந்தினர்களுக்கு ஆந்திராவின் காரசாரமான பிரியாணி வகைகளும் குடகின் தனி சிறப்பு உணவுகளும் இனிப்பு வகைகளும் மைசூர் பாகும் பரிமாறப்பட்டன. மேலும், கோலாகலமாக நடந்து முடிந்த ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டாவின் காதல் திருமணம் செய்து கொண்ட போட்டோஸ் இணையதளத்தில் வெளியாகி செம வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

