பொதுவாக மாம்பழ சீசன் வந்துவிட்டாலே மாம்பழத்தை அனைவரும் உண்பார்கள். வீட்டில் உள்ள அம்மாக்களும் மாம்பழத்தை வைத்து மாங்காய் வைத்தும், விதவிதமான ஊறுகாய், பச்சடி, ஜாம், ஐஸ்கிரீம் போன்றவற்றை செய்து கொடுத்து அசத்துவார்கள். ஆனால், உங்களுக்கு தெரியுமா?பழுக்காத பச்சை மாங்காயை வைத்து உங்கள் முக அழகை வேற லெவலுக்கு மாத்த முடியும்னு சொன்னா நீங்க நம்புவீங்களா? சிலர் மாம்பழத்தை முகத்திற்கு அப்ளை செய்வார்கள்.
Table of Contents

அந்த வகையில், பச்சை மாங்காயை பல விதங்களில் உங்கள் முகத்திற்கு அப்ளை செய்யலாம். அதனுடைய, ரிசல்ட்டை பார்த்து நீங்களே அசந்து போயிடுவீங்க. பச்சை மாங்காவை உங்கள் சருமத்தில் பயன்படுத்தும் போது ஒரு மேஜிக் மிராக்கள் நடப்பதை நீங்களே கண்கூடாக பார்க்கலாம்.
சருமத்திற்கு தேவையான சத்துக்களை கொடுத்து உங்கள் சருமத்தை பளபளன்னு ஜொலிக்க வைப்பதை நீங்களே நம்ப மாட்டீர்கள். சருமத்தை ஜொலிக்க வைக்கும் பச்சை மாங்காவை உங்கள் சருமத்திற்கு பயன்படுத்தும் போது, என்னென்ன நன்மைகள் நடைபெறும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
பச்சை மாங்காவில் நிறைந்துள்ள நீர் பச்சை மாங்காவில் நிறைய நீர்ச்சத்து இருக்கிறது இது உங்கள் சருமத்தை ஹைட்ரேட்டராக வைத்திருக்க உதவி செய்யும் பச்சை மாங்காவை ஸ்கிரப்பராக பயன்படுத்தும் போது உங்கள் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவதோடு எதிர்த்துப் போராடும்.

மேலும், ரத்த ஓட்டத்தை உங்கள் சருமத்தில் அதிகரித்து சரும செல்களை புதுப்பிக்கும். பச்சை மாங்காவை டோனராக செய்தோ ஃபேஸ் பேக்காவோ அப்ளை செய்து வர உங்கள் சருமத்தின் தன்மையை முற்றிலும் மாறுபடும்.
மேலும், சருமத்தில் உள்ள மாசுகள், பிக்மென்ட்டேஷன் குறையும். பச்சை மாங்காவில் மாலிக் அமிலம் என்று ஒன்று இருக்கிறது. இது சருமத்தை பளபளவென்று ஜொலிக்க வைக்கும். ஆயில் ஸ்கின் மற்றும் அடிக்கடி பரு வருபவர்கள் பச்சை மாங்காய் சாற்றை முகத்தில் பருக்கள் உள்ள இடத்தில் தொடர்ந்து பூசி வர விரைவில் குறைவதை கண்கூடாக பார்க்கலாம்.

பச்சை மாங்காவில் உள்ள வைட்டமின் சி உங்கள் சருமத்தில் கொலாஜன் உற்பத்தி அதிகரித்து உங்கள் சருமத்தை இளமையாக வைத்திருக்கும். ஆன்ட்டி ஏஜிங் தன்மையை கொண்டது.
பச்சை மாங்காவை எப்படி எல்லாம் ஸ்கின்னுக்கு பயன்படுத்தலாம்
பச்சை மாங்கா – பாதாம் பொடி

பச்சை மாங்காவை நன்கு மையாக அரைத்துக் கொள்ளுங்கள். அதில், பாதாம் பொடியை சேருங்கள். பொடியாக இல்லை என்றால், ஐந்து பாதாமை மாங்காயுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இதோடு பால் சேர்த்து இந்த கலவையை உங்கள் முகத்தில் அப்ளை செய்யுங்கள். 15 நிமிடங்கள் அப்படியே காய விட்டு பின் வெதுவெதுப்பான நீரில் உங்கள் முகத்தை கழுவலாம்.
பச்சை மாங்கா – கடலை மாவு

அரைத்த பச்சை மாங்காயுடன் கடலை மாவு, தேன், தயிர், மஞ்சள் பொடி ஆகியவற்றை அனைத்தையும் சேர்த்து நன்கு கலந்து தயிர் அல்லது தண்ணீர் உடன் சேர்த்து, இந்த பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்து பகுதியில் அப்ளை செய்து 15ல் இருந்து 20 நிமிடங்கள் அதை காய விட்டு பிறகு சாதாரண நேரில் முகத்தை கழுவினால் முகம் பளபளன்னு மாறிவிடும். மென்மையாகவும் இருக்கும்.
பச்சை மாங்காய் – முல்தானி மெட்டி

ஒரு பௌலில் அரைத்த பச்சை மாங்காய் பேஸ்டுடன் யோகர்ட், ரோஸ் வாட்டர், முல்தானி மெட்டி ஆகியவற்றை சேர்த்து ஸ்மூத்தாக அரைத்து இந்த கலவையை உங்கள் முகம் மற்றும் கழுத்து பகுதியில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவிக்கொள்ளலாம். வெதுவெதுப்பான நீரில் கழுவுவது மிகவும் நல்லது. இந்த ஃபேஸ் பேக் பருக்கள் அதிகம் வருபவர்கள் மற்றும் ஆயில் ஸ்கின் உள்ளவர்களுக்கு நல்ல பலனை கொடுக்கும்.
பச்சை மாங்காய் – முட்டை

பச்சை மாங்காயுடன் முட்டையின் வெள்ளை கருவும் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து இந்த பேஸ்ட்டை கழுத்து மற்றும் முகத்தில் மேலிருந்து கீழாக அப்ளை செய்து 15ல் இருந்து 20 நிமிடங்கள் காய விட்டால் முட்டையின் வெள்ளைக்கரு சேர்ந்திருப்பதால் லேயராக உறிந்து விடும். அதை கீழிருந்து மேல் நோக்கி உறித்து விடுங்கள். பின்பு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிக்கொள்ளலாம். முதல் முறை பயன்படுத்தும் போது உங்கள் முகத்தில் மிகப்பெரிய வித்தியாசம் தெரிவதை நீங்களே கண்கூடாக பார்க்கலாம்.
பச்சை மாங்காய் – அவகேடோ

நன்கு அரைத்த பச்சை மாங்காயுடன் அவகேடோவை சேர்த்து நன்றாக மசித்து கொள்ளவும். இந்த கலவையை 15 லிருந்து 20 நிமிடம் உங்கள் சருமத்தில் மற்றும் கழுத்து பகுதியில் பூசி வர நல்ல மென்மையான சருமத்தை பெறலாம்.
குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTV Prime பொறுப்பாகாது.

