சன் டிவி சீரியல் என்றாலே இல்லத்தரசிகள் டிவியை விட்டு எழுந்திருக்கவே மாட்டார்கள். அப்படி சன்டிவயில் ஒளிபரப்பாகும் சீரியல் எல்லாமே பயங்கர ஹிட்.
அதுவும் பிரைம் டைமில் ஒளிபரப்பாகும், அன்னம், மூன்று முடிச்சு, மருமகள், சிங்கப்பெண்ணே, எதிர்நீச்சல் தொடர்கிறது என எல்லாமே இல்லத்தரசிகளின் ஃ பேவரைட் லிஸ்ட் தான். குறிப்பாக இந்த சீரியல்கள் டிஆர்பி ரேட்டில் முதல் இடங்களை பிடித்துவிடும்.
இந்த நிலையில் தான் புதிய சீரியல் ஒன்று சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கு பதில் எந்த சீரியல் முடிவுக்கு வரப்போகிறது என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை.
ஆனால் புதிய சீரியல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. துளசி என்ற சீரியல் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இதில் ஷ்ராவனிதா ஹீரோயினாகவும், சுந்தரி மற்றும் சிங்கப்பெண்ணே சீரியலில் வந்த அருண் குமார் ஹீரோவாகவும் நடிக்க உள்ளனர்.
ஷ்ராவனிதா ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான தென்றல் வந்து என்னை தொடும், ஈரமான ரோஜாவே போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

