Close Menu
    What's Hot

    RTO அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. ஒரு மணி நேர சோதனையில் அம்பலமான உண்மை..!

    April 1, 2026

    AirPods Pro 3 vs Galaxy Buds 4 Pro: 2026-ன் பிரீமியம் ஆடியோ போர்! எதை வாங்கலாம்?..

    April 1, 2026

    தவெகவின் அசுர வளர்ச்சியை கண்டு FAKE NEWS பரப்பும் கும்பல்.. தவெக ராஜ்மோகன் வேண்டுகோள்!

    April 1, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • கல்வி
    • வாழ்க்கைமுறை
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • தொழில்நுட்பம்
      • சமையல்
      • அழகு & பேஷன்
      • ஓடிடி
      • வேலைவாய்ப்பு
    • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»ஆன்மிகம்»Ruthratcham: ருத்ராட்சம் அணிபவரா நீங்கள்?.. கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்..!
    ஆன்மிகம்

    Ruthratcham: ருத்ராட்சம் அணிபவரா நீங்கள்?.. கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 26, 2026Updated:February 26, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Ruthratcham UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    ருத்ராட்சம் அணிந்தாலே சாமியாராக போய்விடுவோம் என்ற ஒரு மாற்று நம்பிக்கை எப்போதும் பரவலாக இருந்தே வருகிறது. ஆனால், இந்த ருத்ராட்சத்தை யாரெல்லாம் அணியலாம். இதை அணிந்தால் என்னென்ன பலன் கிடைக்கும் என்பதை பற்றி தெளிவாக இதில் காண்போம்.

    Table of Contents

    • ருத்ராட்சம் உருவான கதை
    • யார் அணிய வேண்டும்
    • பூஜை செய்யும் முறை
    • ருத்ராட்சம் அறியப்படாத தகவல்கள்
    • ருத்ராட்சம் கோர்க்கும் முறை
    • குளிக்கும்போது அணியலாமா?
    • ருத்ராட்சம் அணிவதால் உண்டாகும் நன்மைகள்
    Ruthratcham UTv

    ருத்ராட்சம் உருவான கதை

    சிவபெருமானின் கண்ணீர் துளியிலிருந்து ருத்ராட்சம் தோன்றியதாக சொல்லப்படுகிறது. சிவபெருமான் நீண்ட காலம் ஆழ்ந்த தியானத்தில் வீற்றிருந்தார். நீண்ட காலத்திற்குப் பிறகு அவர் கண்களை திறந்த போது அவரது கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் பூமியில் விழுந்தன.

    பூமி பிரதேசத்தின் இந்தியா, நேபாளம், இந்தோனேசியா போன்ற குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் சிவபெருமானின் கண்ணீர் துளி விழுந்ததாகவும், இந்த கண்ணீர் துளிகள் தான் விருட்சமாக வளர தொடங்கியது.

    Ruthratcham UTv

    இவற்றை தான் நாம் ருத்ராட்சம் மரம் என்கிறோம். ருத்ராட்ச மரத்தில் காய்ந்த காய்கள் முதிர்ந்து புனிதமான ருத்ராட்சமாக மாறுகிறது. இந்த ருத்ராட்சம் ஈசனின் கருணையாக கருதப்படுகிறது. சிவபெருமானின் கண்ணீர் துளிகள் ருத்ராட்சமாவதால், இது ஒரு தெய்வீகமான புனித பொருளாக பார்க்கப்படுகிறது.

    யார் அணிய வேண்டும்

    ஒவ்வொரு ருத்ராட்சமும் ஆன்மீக சக்தி, ஞானம், தூய்மை, அமைதியின் அடையாளமாக கருதப்படுகிறது. பொதுவாக ருத்ராட்சம் ஆண், பெண் பாகுபாடு என்று யார் வேண்டுமானாலும் அணியலாம்.

    பெண்கள் ருத்ராட்சம் அணிவதற்கு சில வரைமுறைகள் உள்ளன. ருத்ராட்சம் அணிபவர்கள் அதை முழுமையாக வாரத்திற்கு ஒரு முறை பூஜை செய்து அணிந்து கொள்வது சிறப்பாகும். குறிப்பாக பிரதோஷம் அல்லது சிவபெருமானுக்கு உகந்த நாளான திங்கட்கிழமைகளில் பூஜை செய்து அணிவது நல்லது.

    Ruthratcham UTv

    பூஜை செய்யும் முறை

    சுத்தமான தாழம்பூ தட்டில், ஒரு வெற்றிலை வைத்து அதன் மீது ருத்ராட்சரத்தை வைத்து சந்தனம், பன்னீர், விபூதி, வில்வம் ஆகியவற்றை கொண்டு அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.

    அபிஷேகம் செய்ததற்கு ஒரு நாளைக்கு முன்பு ருத்ராட்சத்தை சுத்தமான பாலில் ஊற வைத்து அதன் பின்பு பூஜை செய்து அணிந்து கொண்டால், நேர்மறை சக்திகள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

    Ruthratcham UTv

    ருத்ராட்சம் பல இடங்களுக்கு பிரயாணம் செய்து பல இடங்களில் சாப்பிட்டு தூங்குபவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். இது துஷ்ட சக்திகள் இடம் இருந்து நம்மை பாதுகாக்க கூடியதாகும். தீய சக்திகளிடமிருந்து பாதுகாக்கிறது. சில சமயங்களில் ருத்ராட்சம் பாதுகாப்பு கவசமாக நம்மை காப்பாற்றும்.

    ருத்ராட்சம் அறியப்படாத தகவல்கள்

    ருத்ராட்சம் என்பது ஈல்லியோகார்பஸ் கனிற்றஸ் என்ற பெயருள்ள மரத்தின் விதை. இவ்விதை ஒருவரின் ஆன்மீக வளர்ச்சிக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. ருத்ராட்ச மாலைகள் சாதாரணமாக மாலையாக கோர்ப்பது வழக்கம்.

    நமது மரபில் 108 + 1 என்ற கணக்கில் மணிகள் இருக்க வேண்டும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அந்த தனியாக உள்ள ஒரு மணியை பிந்து என்கின்றனர். ஒவ்வொரு மாலையிலும் ஒரு பிந்து இருப்பது அவசியம். இல்லையேல் அதன் சக்தி ஒருவித சுழற்சியில் சிக்கிக் கொள்ளும். இதனால், அதை அணிபவர் சிறிது பலவீனமாக இருப்பவரானால் தலைசுற்றல் ஏற்பட வாய்ப்புண்டு. சில நாட்களில் குடும்பத்தை விட்டு விலகுவார் என்றும் சொல்வார்.

    ருத்ராட்சம் கோர்க்கும் முறை

    ருத்ராட்சம் மணிகளை கோர்க்கும் பொழுது பட்டு நூலோ அல்லது பஞ்சு நூல் கொண்டு கோர்ப்பது சிறந்தது. நூலில் கோர்த்த மாலை என்றால் ஆறு மாதத்திற்கு ஒரு முறை நூலை மாற்றுவது நல்லது. இல்லை என்றால், நூல் ஒருநாள் அறுந்து உங்கள் 108 மணிகளும் ஒவ்வொரு பக்கம் உருளை வாய்ப்பு உண்டு. செம்பு, வெள்ளி, தங்க கம்பியிலும் இம்மணிகளை கோர்க்களம்.

    ஆனால், பெரும்பாலும் நீங்கள் அதை நகை கடைக்கு கொண்டு செல்வீர்கள். கடைக்காரர் தங்கக் கம்பியும் அல்லது வேறு எதுவோ கொண்டு இருக கட்டி முடிக்கும் போது, ருத்ராட்சம் உள்ளே விரிசல் விடலாம். அழுத்தத்தினால் உண்டாகும் விரிசல் உள்ள மாலை நல்லதல்ல.

    குளிக்கும்போது அணியலாமா?

    இந்த மாலையை எந்நேரமும் அணியலாம். குளிக்கும் பொழுது கூட நீங்கள் இதை அணியலாம். நீங்கள் பச்சை தண்ணீரில் குளிப்பவராக, இருந்தால் தண்ணீர் இதன் மேல் பட்டு உங்கள் உடல் மீது படுவது மிக்க சிறந்தது.

    ஆனால், நீங்கள் இரசாயன சோப்பும் சுடு நீரும் பயன்படுத்தினால் அது விரிசலை விட்டு சுலபமாக உடைந்து போக வாய்ப்பு உண்டு. அந்த மாதிரி, சமயங்களில் இதை அணியாமல் இருப்பது நல்லது.

    ருத்ராட்சம் அணிவதால் உண்டாகும் நன்மைகள்

    பஞ்சமுகி எல்லோருக்கும் பொருந்தும். நல்லதும் கூட ஆண், பெண் குழந்தைகள் உட்பட பொதுவான நன்மை உடல் நலம், விடுதலை ஆகியவை கிடைக்கும். ரத்த கொதிப்பை சீராக்கும், நரம்புகளை அமைதிப்படுத்தும்.

    நரம்பு மண்டலத்தில் ஒருவித அமைதியும், சுறுசுறுப்பையும் அளிக்கும் 12 வயதுக்குள்ளாக இருக்கும் சிறுவர்கள் ஆறுமுகமணியை அணியலாம். அது அவர்களை அமைதியாக்கி ஒருமுகப்படுத்தும்.

    தன்னம்பிக்கையை கொடுக்கும், திருமணமானவர்கள் ருத்ராட்சம் அணியலாமா ருத்ராட்சம் என்றாலே பிரம்மச்சாரிகளுக்கானது என்ற எண்ணம் மக்களிடையே இருக்கிறது. திருமணத்திற்கு பின் ருத்ராட்சம் போன்ற ஆன்மீக வாய்ப்புகள் மறுக்கப்படுவது மட்டுமல்லாமல் சிலர் வாழ்க்கையை முடிந்து விட்டதாகவும் நினைத்துக் கொள்கிறார்கள் ருத்ராட்சம் திருமணமானவர்களும் அணியலாம்.

    Hindu Devotional Rudraksha Rudraksha Wearing Rules Spiritual Benefits ஆன்மிக பலன் ருத்ராட்சம் ருத்ராட்சம் அணியும் முறை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பங்குனி உத்திரம் 2026: திருமணத்தடை நீக்கும் தெய்வத் திருமணங்கள்! வழிபாட்டு முறைகளும் பலன்களும்!

    April 1, 2026

    மன அமைதி வேண்டுமா?.. ஆன்மீக ஆற்றலை அதிகரிக்க ஸ்படிக மாலையின் மகிமை..!

    March 27, 2026

    கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டையா?.. பிரிந்த தம்பதியினரை ஒன்று சேர்க்கும் உத்தரகோசமங்கை..!

    March 19, 2026

    எதிர்மறை சக்திகள் விலக.. நினைத்தது நிறைவேற முருகனை வழிபடும் முறைகள்..!

    March 17, 2026

    தீராத வினைகளைத் தீர்க்கும் ஸ்படிக லிங்கம்.. சிவபெருமான் அருளைப் பெற எளிய வழி இதோ..!

    March 16, 2026

    எதிரிகளை வீழ்த்தும் ‘கருங்காலி’ வேல்: வீட்டில் வைப்பதால் ஏற்படும் மிராக்கிள் மாற்றங்கள்..!

    March 13, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    விபத்தில் சிக்கிய விஜய் சேதுபதி… மருத்துவமனையில் அனுமதி..!

    January 31, 2026

    சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புக்கு டும்டும்டும்… உடன் நடித்த நடிகையை கரம் பிடிக்கிறார்!!

    December 17, 2025

    விபத்தில் சிக்கி நடக்கவே முடியாதுனு… – கலங்கிய சினேகா..!

    February 27, 2026
    Don't Miss

    RTO அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. ஒரு மணி நேர சோதனையில் அம்பலமான உண்மை..!

    April 1, 2026

    கோவை துடியலூர் RTO அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் சோதனையில் புரளி எனத் தெரிந்தது. இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    AirPods Pro 3 vs Galaxy Buds 4 Pro: 2026-ன் பிரீமியம் ஆடியோ போர்! எதை வாங்கலாம்?..

    April 1, 2026

    தவெகவின் அசுர வளர்ச்சியை கண்டு FAKE NEWS பரப்பும் கும்பல்.. தவெக ராஜ்மோகன் வேண்டுகோள்!

    April 1, 2026

    கேரவனுக்குள் நடிகையிடம் அத்துமீறல்.. பா**யல் புகாரில் பிரபல இயக்குநர் கைது..!

    April 1, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.