கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நல்லகண்ணு உடல்நலம் குறித்து நலம் விசாரித்தார் தவெக தலைவர் விஜய்.
வயது மூப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியானது.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நல்லகண்ணு உடல் குறித்து நாள்தோறும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. முக்கியமாக அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்து வருகின்றனர்.
செய்றகை சுவாச கருவியுடன் நல்லகண்ணுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

24 மணி நேரம் மருத்துவர்கள் கண்காணிப்பில் நல்லகண்ணு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது மகள் ஆண்டாளை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார் நடிகர் ரஜினிகாந்த்.
தற்போது தவெக தலைவரும், நடிகருமான விஜய், ஆண்டாளை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

