கோவை, போத்தனூர், கருப்பராயன் கோயில் பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக போத்தனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது.
இதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் சலாபி நகர் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த சகுபார் சாதிக் (44) மற்றும் கரும்புக்கடை பகுதியை சேர்ந்த லதிப் (46) என்பவரை விசாரனை செய்ததில், அவர்கள் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதை அடுத்து அவரிடம் இருந்து 4 செல்போன்கள், பணம் 2,46,700 ரூபாய் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

