நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கும், நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கும் வரும் 26-ஆம் தேதி மிகவும் பிரம்மாண்டமாக நெருங்கிய வட்டாரத்தின் மத்தியில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமணத்திற்கான ஏற்பாடுகள் வெகு சிறப்பாகும், விமர்சையாகவும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கன்னட திரையுலகில் காலடி எடுத்து வைத்த சில ஆண்டுகளுக்குள்ளாகவே ராஷ்மிகாவிற்கு திருமணம் நிச்சயக்கப்பட்டது.

பலரும் அறிந்த விஷயம் அதாவது, இவர் அறிமுகமான கன்னட படமான கிரிக் பார்ட்டி படத்தின் கதாநாயகன் ரக்ஷித் ஷெட்டி உடன் ஏற்பட்ட காதலால் திருமணத்தை நோக்கி நகர்ந்து நடுவில் இருவரும் 2017 ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.
திருமணத்துக்கான அடுத்த கட்ட அறிவிப்பு நடைபெறாமலே இருந்தது. இதனால், இவர்களுக்கு இடையில் ஏதோ பிரச்சனை என்றும் பல கருத்துக்கள் அந்த சமயத்தில் முணுமுணுக்கப்பட்டது.

பலரும் கூறியது போல் இந்த திருமணம் நடைபெறாமலே, நின்று போனது. இவர்களின் திருமணம் நிற்க முக்கிய காரணம் தெலுங்கில் ராஷ்மிகாவுக்கு கிடைத்த வாய்ப்பு தான் என்றும், அதனால் அவர் ரக்ஷித் ஷெட்டியை வேண்டாம் என்று உதறிவிட்டார் என்றும் கிசுகிசுக்கப்பட்டது.
ஆனால், சம்பந்தப்பட்ட ரக்ஷித் ஷெட்டியோ மிகவும் ஜென்டில்மேன் ஆக ஒரு பதிவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து இருந்தார். அதில், ராஷ்மிகா மந்தனாவின் பெயரை குறிப்பிடாமல் பகிர்ந்துள்ளார்.

யாரையும் திட்டாதீர்கள் அவர்களுக்கு என்று ஒரு தேர்வும், முடிவு எடுக்கும் உரிமையும் உள்ளது என்று பதிவிட்டிருந்தார். இவரது, இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்தது. மேலும், பல இணையவாசிகள் காதலின் பிரிவை சந்தித்த பின்னரும் காதலி நன்றாக இருக்கட்டும் என்று நினைக்கும் ஆண்களில் இவரும் ஒருவர் என்று, அவரை பாராட்டி தள்ளினர். முன்னதாக, ரக்ஷித் ஷெட்டி இன்னுமும் கன்னட சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

