சிந்து சமவெளி படத்தில் அறிமுகமாகி மைனா என்ற திரைப்படத்தில் நடித்தவர் நடிகை அமலா பால். அந்த படத்திற்கு, பிறகு முன்னணி நடிகர்களுடன் ஒரு ரவுண்ட் வந்தார்.
அதாவது, தலைவா, தெய்வத்திருமகள் ஆகிய படங்களில் நடித்தபோது அதன் இயக்குனர் விஜயை காதலித்தார். இரண்டு பேரின் வீட்டு சம்பந்தத்துடன் திருமணம் நடந்தது. பல தனிப்பட்ட காரணங்களுக்காக இருவரும் விவாகரத்து பெற்றனர்.

அதனை தொடர்ந்து, விஜய் வேறொருவரை திருமணம் செய்து கொண்டார். அமலா பால் சிங்கிளாக சுத்தி வந்து கொண்டிருந்தார். விஜயுடன் பிரிவுக்கு பிறகு சில காலம் சிங்கிளாகவே இருந்த அமலா பால் அதே சமயத்தில் கோவாவில் வைத்து ஜகத் தேசாய் என்பவரை சந்தித்து அந்த முதல் சந்திப்பில் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்ததாகவும், இதையடுத்து திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு தற்போது இலை என்ற மகனும் இருக்கிறார்.

இந்நிலையில், பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட அமலா பால் வாழ்க்கை ஒரு மாதிரி போயிட்டு இருந்துச்சு, ஒரு ஜோசியர் என்னை பார்த்த அப்போ, அவர் என்கிட்ட உங்களுக்கு 32 வயதில் திருமணம் நடக்கும் என்றார். நான் எனக்கே பாய் பிரண்டு இல்லை இதெல்லாம் எப்படி சாத்தியம் என்று நினைத்துக் கொண்டேன்.

அவர் சொன்ன அடுத்த கொஞ்ச நாள்களில் ஜகத் தேசாயை நான் கோவாவில் வைத்து சந்தித்தேன். பிறகு டேட் செய்தோம், நான் கர்ப்பமாகிவிட்டேன். முதலில் நான் திருமணம் செய்ற பிளான்லயே இல்லை. ஆனால், கர்ப்பமாகிவிட்டதால் வேறு வழியில்லாமல் திருமணம் செய்து தானே ஆக வேண்டும் என செய்து கொண்டோம் என்று அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

