நடிகை சமந்தா கடந்த சில வருடங்களாகவே உடல்நிலை காரணமாக சினிமாவில் நடிப்பதை நிறுத்தி இருந்தார். தற்போது, மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கிய அவர் சொந்த தயாரிப்பில் Maa Inti Bangaaram என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் வருகிற மே 15 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

தற்போது, Instagram-ல் சமந்தா ரசிகர்களுடன் உரையாடினார். அதில், பல கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார். தொடர்ந்து, ரீல்ஸ் பார்த்துக்கொண்டே இருப்பதால் அதற்கு அடிமையாகி விடுவது பற்றிய கேள்விக்கு, பதில் அளிக்க சமந்தா நான் ஸ்கூல் படிக்கும் காலத்தில் டைம் டேபிள் போட்டு அதன்படி படிப்பேன். எதிலும், கவன சிதறல் ஏற்படாது.

தற்போது, அப்படி இருக்க முடியுமா என தெரியவில்லை. ரீல்ஸ் பார்ப்பதால் வரும் Fear Of Missing Out மோசமானது. அதனால், நான் என் இன்ஸ்டாகிராமை லாக் செய்து விடுவேன். வேண்டும் என்றால் போர் ஆன மற்ற விஷயங்களை செய்வேன் என சமந்தா அதில் தெரிவித்துள்ளார். மேலும், தன்னை பற்றி நெகட்டிவாக பேசுபவர்களை நான் உடனே பிளாக் செய்து விடுவேன் எனவும் தெரிவித்திருக்கிறார்.


