விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி போட்டியாளராக கலந்து கொண்ட பாவனியிடம் வையில் கார்டு மூலமாக போட்டியில் நுழைந்த அமீர் தனது காதலை வெளிப்படுத்தினார்.
நிகழ்ச்சியின் டிஆர்பிக்காக இவ்வாறு செய்கிறார் என பல விமர்சனங்கள் எழுத நிலையில், நிகழ்ச்சிக்கு பின்னரும் பாவினி மீது அதே அளவு அமீர் காதல் கொண்டிருந்தார். இதனை அடுத்து திரையில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் இருவரின் காதலுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மரியாதையும் மதிப்பும் கிடைத்தது.

இருவரும் இணைந்து நடிகர் அஜித்குமாரின் துணிவு படத்தில் நடித்திருந்தனர். கடந்த ஆண்டு இவர்களுக்கு கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் சின்னத்திரை பிரபலங்கள் பிக் பாஸ் பிரபலங்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பாவனி தங்களது வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அப்போது அமீர்க்கு யாருக்குமே தெரியாத ஒரு திறமை இருக்கிறது. அந்த திறமையை நோக்கி தான் தற்போது அமீரின் பயணம் தொடங்கி இருக்கிறது. அது என்ன என்றால், அவர் நன்றாக கதை எழுதுவார். அதற்காக நாங்கள் இருவரும் தற்போது பிரிந்து வாழ்கிறோம்.

நான் ஹைதராபாத்தில் இருக்கிறேன். அவர் நண்பர்களுடன் இருக்கிறார். எனக்கு சென்னையில் வேலை இருந்தால் ஹோட்டலில் தங்குகிறேன். அங்கு வந்து என்னை அமீர் சந்தித்து செல்வார். இது எனக்கு வருத்தமாக இருந்தாலும், அவருடைய ஆசைக்கும் கனவுக்கும் நான் மதிப்பளிக்கிறேன்.
நான் சென்னையில், இருந்தால் அமீர் என்னுடன் தான் எப்போதும் இருப்பார். இதனால், அவரது இலக்கை நோக்கி அவரால் ஓட முடியாது. இதற்காக இருவரும் சேர்ந்து இந்த முடிவை எடுத்திருக்கிறோம்.

இதில் எனக்கு எந்த உடன்பாடும் இல்லை. ஆனால், அமீர் மிகவும் கில்டியாக பீல் செய்கிறார். இதனால், அவரின் விருப்பப்படி நாங்கள் இருவரும் திருமணம் ஆகியும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகிறோம் என்று பாவணி வருத்தத்துடன் அதில் தெரிவித்துள்ளார்.

