Close Menu
    What's Hot

    ஆப்பிளின் அடுத்த ‘மாஸ்டர் பிளான்’! 2026-ல் வெளியாகும் iPhone Fold: மூன்று அதிரடி மாற்றங்கள் என்னென்ன?

    April 5, 2026

    ஏப்ரல் 5: உங்கள் ராசிக்கு இன்றைய நாள் எப்படி இருக்கும்?.. திடீர் பணவரவு யாருக்கு?..

    April 5, 2026

    இந்தியா-ஈரான் கச்சா எண்ணெய் ஒப்பந்தம்: பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு!

    April 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»கோவை»வரும் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் பெரிய மாற்றத்தை திமுக நிகழ்த்தும்.. அடித்து சொல்லும் சிவசேனாதிபதி!
    கோவை

    வரும் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் பெரிய மாற்றத்தை திமுக நிகழ்த்தும்.. அடித்து சொல்லும் சிவசேனாதிபதி!

    Prime ReporterBy Prime ReporterFebruary 21, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    DMK UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கொங்கு மண்டலத்தில் வருகிற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை திமுக பெரும் சிவசேனாதிபதி பேட்டியளித்துள்ளார்.

    கொங்கு மண்டலத்தில் வருகிற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை திமுக பெரும் என, வெளிநாடு வாழ் தமிழர் நல வாரிய தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி கூறினார்.

    திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் “தமிழ்நாடு தலைகுனியாது” 2026 சட்டமன்ற தேர்தல் பொதுக்கூட்டம் திருப்பூர் கொங்கு மெயின்ரோடு பகுதியில் நேற்று இரவு நடந்தது. இதில், சுற்றுச்சூழல் அணி செயலாளர், வெளிநாடு வாழ் தமிழர் நல வாரிய தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி வடக்கு மாவட்ட பொறுப்பாளர், மேயர் தினேஷ்குமார், வடக்கு மாநகர செயலாளர் தங்கராஜ், வடக்கு சட்டமன்ற பொறுப்பாளர் குமணன் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர்.

    அப்போது, ஒன்றிய பா.ஜனதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டிக்கும் விதமாக கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் காதில் பூ வைத்தனர்.

    மேலும், தமிழகத்திற்கு பட்ஜெட்டில் ஒன்றும் வழங்காததை கண்டித்து கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்களுக்கு முட்டை போண்டா வழங்கப்பட்டது. இது அந்த பகுதியில் சுட சுட தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

    முன்னதாக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதில் சுற்றுச்சூழல் அணி செயலாளர், வெளிநாடு வாழ் தமிழர் நல வாரிய தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி கலந்து கொண்டு பல்வேறு அமைப்பினரிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

    இதனைத்தொடர்ந்து, நிருபர்களுக்கு கார்த்திகேய சிவசேனாதிபதி பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: முதல்வர் உத்தரவின் படி சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பொதுமக்களின் தேவைகள் மற்றும் பிரச்சனைகள் குறித்து தெரிந்து கொள்ள கலந்துரையாடல் கூட்டம் நடத்தப்படுகிறது.

    பொதுமக்களின் விருப்பங்கள் குறித்தும் கேட்டறியப்படுகிறது. திமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. விஜயகாந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் கலைஞர் மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள். இந்தக் கூட்டணியை பொறுத்துக் கொள்ளாத சிலர் பல்வேறு வதந்திகளை பரப்பி வருகிறார்கள்.

    இந்த முறை தேர்தல் முடிவுகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் முதல்வர் சிறப்பான ஆட்சி செய்துள்ளார். இந்த ஆட்சி குறித்து கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பெண்கள் என அனைத்து தரப்பினரும் அறிவார்கள். மீண்டும் திமுக ஆட்சி அமைய வாக்களிப்பார்கள்.

    கொங்கு மண்டலத்தில் மிகப்பெரிய வெற்றி திமுக சட்டமன்றத் தேர்தலில் பெரும்,
    மாணிக்கம் தாகூர் எம்பி பேசி வரும் கருத்துக்கள் வருத்தமளிக்கிறது. ராகுல் காந்தியும், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் நல்ல நட்புறவில் உள்ளனர். தேர்தல் அறிக்கை சிறப்பாக வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Latest Political Update Political Leader Tamil Sivasenadhipathi Tamil Nadu Politics Tamil political news அரசியல் செய்திகள் சிவசேனாதிபதி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    கறார் காட்டிய தேர்தல் அதிகாரி.. மாடிக்கு ஊர்ந்து சென்று மனுத்தாக்கல் செய்த மாற்றுத்திறனாளி..!

    April 4, 2026

    ஓட்டுக்கு பணம் வாங்கினால் இதுதான் கதி.. மொட்டை அடித்து மிளகாய் மாலையுடன் வந்த சுயேச்சை வேட்பாளர்..!

    April 4, 2026

    அலட்சியமா? விபத்தா? 40 அடி ஆழ கழிவுநீர் தொட்டியில் விழுந்த 2 ஊழியர்களுக்கு நேர்ந்த விபரீதம்..!

    April 4, 2026

    போக்குவரத்து நெரிசலில் சாவகாசமாக சாலையை கடந்த ‘பாகுபலி’ யானை..!

    April 4, 2026

    இன்னும் இரண்டு நாட்களே மிதம்.. ஒரே நாளில் 27 பேர் வேட்புமனு தாக்கல்..!

    April 3, 2026

    குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பு பத்திரமாக மீட்பு.. கோழியை உயிருடன் மீட்ட நெகிழ்ச்சி வீடியோ..!

    April 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ஏப்ரல் 5: உங்கள் ராசிக்கு இன்றைய நாள் எப்படி இருக்கும்?.. திடீர் பணவரவு யாருக்கு?..

    April 5, 2026

    கையிருப்பு வெறும் 50 ஆயிரம் தான்.. சுந்தர்.சி மற்றும் குஷ்புவின் சொத்து மதிப்பு..!

    April 4, 2026

    அரசியல்னா சும்மா நினைச்சீங்களா?.. விஜய்யை சாடிய விந்தியா..!

    April 3, 2026

    தங்கையை எதிர்க்க தவெகவுக்கு தாவும் அண்ணன்.. பாஜகவுக்கு ஷாக் கொடுத்த அதிமுக பிரமுகர் மகன்!

    March 25, 2026

    ஆப்பிளின் அடுத்த ‘மாஸ்டர் பிளான்’! 2026-ல் வெளியாகும் iPhone Fold: மூன்று அதிரடி மாற்றங்கள் என்னென்ன?

    April 5, 2026
    Don't Miss

    ஆப்பிளின் அடுத்த ‘மாஸ்டர் பிளான்’! 2026-ல் வெளியாகும் iPhone Fold: மூன்று அதிரடி மாற்றங்கள் என்னென்ன?

    April 5, 2026

    ஆப்பிள் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் இந்த ஆண்டு அறிமுகமாகிறது. இதில் உள்ள 3 முக்கிய மாற்றங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த முழு விவரம்.

    ஏப்ரல் 5: உங்கள் ராசிக்கு இன்றைய நாள் எப்படி இருக்கும்?.. திடீர் பணவரவு யாருக்கு?..

    April 5, 2026

    இந்தியா-ஈரான் கச்சா எண்ணெய் ஒப்பந்தம்: பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு!

    April 4, 2026

    ராஷ்மிகா கர்ப்பமா?.. வைரலாகும் இன்ஸ்டாகிராம் போஸ்ட்..!

    April 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.