பொதுவாக இளநீர் குடிக்கும் பழக்கம் அனைவருக்கும் இருக்கும். பெரும்பாலானோர் இளநீரை காலையில் தான் குடிக்கிறார்கள். ஒரு பக்கம் இரவில் இளநீர் குடிக்கலாமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது.
உண்மையில் இரவில் உறங்குவதற்கு முன் இளநீர் குடிப்பது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது. குறிப்பாக, பருவ கால நோய் தொற்றுகளில் இருந்தும் காப்பாற்ற அது உதவும். இளநீரில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு போன்ற பண்புகள் இருக்கிறது.
மேலும், நிறைய வைட்டமின்களும் தாதுக்களும் இளநீரில் அடங்கியிருக்கிறது. இளநீர் அருந்துவதால் கூந்தல் மற்றும் சருமத்திற்கு அது வலு சேர்கிறது.

மலச்சிக்கல் உள்ளவர்கள் இரவில் படுக்கும் முன் இளநீரை குடிக்கலாம். தேங்காயில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை போக்குகிறது. மேலும், இளநீரில் எலெக்ட்ரோலைட்டுகள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் இருப்பதால் உடலில் ஏற்படும் நீர் பற்றாக்குறையை போக்க இளநீர் நல்ல மருந்தாக செயல்படுகிறது.
அதனால், தான் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இளநீரை மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள். இளநீர் இதய நோய்களை தடுக்க வல்லது ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிப்பது குறிப்பிடத்தக்கது.
இளநீரின் நன்மைகள்
- எலக்ட்ரோலைட்களுடன் இயற்கையான நீரூற்றும் கிடைக்கிறது.
- இதய ஆரோக்கியம் மற்றும் ரத்த அழுத்தத்தை ஆதரிக்கிறது.
- ரத்த சர்க்கரை அளவு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடங்கள் இருக்கின்றன.
- ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி நீரிழிவு தொடர்பான சேதத்தை குறைக்கிறது.
- சிறுநீரக கற்களை தடுக்கிறது.
- செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
இளநீரின் தீமைகள்
- அதிகப்படியான பொட்டாசியம் இருப்பதால் அதிகமாக குடிப்பது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தி கொடுக்கும்.
- செரிமான பிரச்சனைகள் மற்றும் ஒவ்வாமையை ஏற்படுத்தும்.
- சர்க்கரையும் கலோரிகளும் அதிகமாக இருப்பதால் நீரிழிவு அல்லது ரத்த சக்கரை மேலாண்மை பிரச்சனைகளை உள்ளவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடும்.
குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTV Prime பொறுப்பாகாது.

