யார் 200 இடங்களில் வெல்லப் போகிறார்கள் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் திருச்சியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டியளித்துள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து ரயில் மூலம் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திருச்சி ரயில் நிலையம் வருகை புரிந்தார். திருச்சி ரயில் நிலையத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அதில் கூறுகையில், திருச்சியில் வருகிற 11 ஆம் தேதி பிரதமர் பங்கேற்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் இரண்டாவது பரப்புரை கூட்டம் திருச்சியில் நடைபெற உள்ளது. 90% சதவீதம் வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை. பொய்யான வாக்குறுதிகள் திமுக அளித்துள்ளது. இபிஎஸ் தான் அடுத்த முதல்வராக வருவார்.சட்டம் ஒழுங்கு சரியில்லை. எங்கு பார்த்தாலும் கஞ்சா கொலை,கொள்ளை அதிகமாகி உள்ளது.
திமுகவால் மக்களுக்கு பாதுகாப்பான ஆட்சி கொடுக்க முடியவில்லை. திமுக அமைச்சர் நேரு மட்டும் ஏராளமான அமைச்சர்கள் மீது அமலாக்கதுறை வழக்கு உள்ளது. 200 இடங்கள் யார் வெற்றி பெற போகிறார்கள் என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள். ஓ.பன்னீர் செல்வம் மீது நாங்கள் மதிப்பு வைத்துள்ளோம் எந்தப் பக்கம் இருந்தால் அவருக்கு நல்லது என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும்.
பிரதமரை சந்திக்க நேரம் கொடுக்கவில்லை அவர் விரக்தியில் இருப்பதால் தான் முதல்வரை சந்தித்ததாக எழுப்பிய கேள்விக்கு அது பழைய கதை. தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டிய எல்லா நிதிகளையும் மத்திய அரசு ஒதுக்கி கொண்டு தான் உள்ளது கல்விக்கு ஒதுக்க வேண்டிய நிதியையும் ஒதுக்கி தான் உள்ளது. ஆதி திராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வேறு துறைக்கு தமிழக அரசு பயன்படுத்துகிறது.

