தமிழ் சினிமாவில் கமல்- ரஜினி, அஜித் -விஜய், சிம்பு – தனுஷ் என திரைப்படங்களில் இரு துருவங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்வது புதிதல்ல. எம்ஜிஆர், சிவாஜி காலம் தொடங்கி தற்போது வரை இந்த மோதல் நடைபெற்றுக் கொண்டுதான் வருகிறது.
இவர்களின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மோதிக் கொள்வது அன்றாட நிகழ்வாகவே மாறிவிட்டது. ஆனால், திரைக்குப் பின்னால் அஜித் விஜய் இருவருக்கும் இடையே இருக்கும் உறவு குறித்து அஜித்தின் மனைவி ஷாலினி தற்போது வெளியிட்டுள்ள தகவல் சோசியல் மீடியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

விஜய் ஜனநாயகன் படத்தோடு நடிப்பதை நிறுத்தப் போவதாக கூறிவிட்டு தற்போது, தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் வேலைகளை முழு வீச்சில் தொடங்கி இருக்கிறார். அதேபோல் நடிகர் அஜித்தும் நடிப்பை நிறுத்தி தனது கனவான கார் ரேசிங்கில் பங்கு பெற்று வருகிறார்.
அந்த போட்டிகள் முடிந்த பிறகு அஜித் தனது அடுத்த படத்திற்கான வேலைகளை துவங்க இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், திருமணத்துக்கு பிறகு அவ்வளவாக கேமரா முன் வராமல் இருந்த நடிகை ஷாலினி அப்போது, புதிய படங்களை காண திரையரங்குக்கு விசிட் செய்கிறார்.

மேலும், தனியார் நிகழ்ச்சி, விருது வழங்கும் விழாக்கள் எனவும், இப்போது அதிகம் பங்கு கொள்கிறார். அப்படி சமீபத்தில், கலந்து கொண்ட ஒரு விருந்து விழாவில் நடிகை ஷாலினி அஜித் விஜயின் நட்பு குறித்து பேசி உள்ளார்.
அதில் அவர் அவர்களுக்கிடையில் மிக ஆரோக்கியமான உறவு உண்டு இருவரும் ஒருவரின் வெற்றிக்கு மற்றொருவர் மகிழ்வர். அது ஆழமானது என இருவரின் நட்பு குறித்து பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது.

