கமலஹாசன் ரஜினிகாந்த் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் ப்ரோமோ வீடியோ சனிக்கிழமை 12.0 7 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தில் நடித்திருந்தார். இதற்கான படப்பிடிப்பு முடிந்து விட்டதாக கூறப்படும் நிலையில், ஜூலை மாதம் அல்லது ஆகஸ்ட் மாதத்தில் அறிவிப்புகள் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கும் படத்தில் ரஜினி நடிப்பதற்கான படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. அவர் நடிப்பில், கடைசியாக தக் லைஃப் படம் வெளியானது.

அடுத்ததாக கல்கி 2898 ஏடி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ஆக கலக்கும் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகனாக இருக்கும் கமலஹாசனும் இணைந்து நடிக்கும் புதிய படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.
45 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் இணையும் இந்த படத்தின் ப்ரோமோ சூட் நடந்து முடிந்துள்ளது. இந்த படத்தை ரெட்ஜெண்ட் மூவிஸ் தயாரிக்கிறது. இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ நாளை வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. மேலும், இது தொடர்பான போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
The Magic unfolds, for the world to witness ✨ 😎#KHxRK Promo Video from tomorrow. 12:07PM. #RedGiant17 ✨ pic.twitter.com/42tZb150oA
— Red Giant Movies (@RedGiantMovies_) February 20, 2026

