Close Menu
    What's Hot

    ஹெல்த்டெக் & பயோடெக்: 2026-31 காலக்கட்டத்தில் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கும் ‘சூப்பர்’ துறைகள்!

    April 11, 2026

    ஜியோ-ஹாட்ஸ்டாரில் ‘சாட்ஜிபிடி’ புரட்சி! இனி பேசினாலே போதும்.. உங்களுக்குப் பிடித்த படங்கள் ரெடி!

    April 11, 2026

    கோவை தெற்கு: செந்தில்பாலாஜி vs அம்மன் அர்ஜுனன் – ‘ஸ்டார்’ தொகுதியில் உச்சகட்டப் பரபரப்பு!

    April 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Utv PrimeUtv Prime
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    Utv PrimeUtv Prime
    Home»கோவை»பரஞ்சோதி மாரியம்மன் கோயிலில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா.. பக்தர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கல்..!
    கோவை

    பரஞ்சோதி மாரியம்மன் கோயிலில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா.. பக்தர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கல்..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 20, 2026Updated:February 20, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Temple UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கவுண்டம்பாளையம் பரஞ்சோதி மாரியம்மன் கோவிலில் திருநெறிய தீந்தமிழ் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைப்பெற்ற மகா அன்னதானத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    கோவை கவுண்டம்பாளையம் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், பரஞ்சோதி மாரியம்மன் திருக்கோவில் திருநெறிய தீந்தமிழ் திருக்குட நன்னீராட்டு பெருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

    யாகசாலையில் நான்கு கால யாகங்கள் நடத்தி கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், சுற்றுப்பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்த்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Temple UTv

    தொடர்ந்து அனைவருக்கும் மகா அன்னதானம் நடைபெற்றது. கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், பரஞ்சோதி மாரியம்மன் திருக்கோவில், 12 ஆண்டுகளுக்கு பிறகு இக்கோவில் புணரமைக்கப்பட்டு திருநெறிய தீந்தமிழ் திருக்குட நன்னீராட்டு பெருவிழா விமர்சையாக நடைபெற்றது.

    மஹா கணபதி ஹோமத்துடன் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நிகழ்ச்சி தொடங்கியது. தீயணைப்பு நிலைய விநாயகர் கோவிலில் இருந்து முளைப்பாரி மற்றும் தீர்த்தக்குடம் அழைத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து முதற்கால வேல்வி பூஜைகள் நடைபெற்றது. இரண்டாம் கால வேள்வி, மூன்றாம் கால வேள்விகள் நடைபெற்றது.

    இன்று 108 மூலிகைகளைக் கொண்டு நான்காம் கால வேள்வி நடைபெற்றது. வேள்விகளை பல்லடம் புத்தரைச்சல் சிவநெறி செல்வர் சிவதிரு சு ஆறுமுகசாமி தலைமையிலான குழுவினர் செய்தனர். இதையடுத்து, புனித நீர் கலசங்கள் கோவிலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு திருநெறிய தீந்தமிழ் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது.

    Temple UTv

    அதைத்தொடர்ந்து, அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், சிவன், பரஞ்சோதி மாரியம்மன் தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் புனித நீர் தெளிக்கப்பட்டது.

    இந்நிகழ்வில், சுற்று வட்டாரங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அனைவருக்கும் மகா அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் கும்பாபிசேக நிகழ்வில் பங்கேற்ற பக்த்தர்கள் அனைவருக்கும் இலவசமாக மரக்கன்றுகளை வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் மற்றும் கவுண்டம்பாளையம் பிரிவு ஊர்ப்பொதுமக்கள் செய்திருந்தனர்.

    Mariamman festival Tamil Nadu Paranjothi Mariamman Temple Temple festival news அம்மன் கோயில் திருவிழா திருக்குட நன்னீராட்டு விழா பக்தர்கள் திரளான வருகை பரஞ்சோதி மாரியம்மன் கோயில்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    கோவை தெற்கு: செந்தில்பாலாஜி vs அம்மன் அர்ஜுனன் – ‘ஸ்டார்’ தொகுதியில் உச்சகட்டப் பரபரப்பு!

    April 11, 2026

    பெண் ஊழியர்களின் பைக் ரேலி.. 100% வாக்குப்பதிவை உறுதி செய்ய முயற்சி..!

    April 10, 2026

    வரி ஏய்ப்பு புகார்?.. 10 இடங்களில் ஒரே நேரத்தில் பாய்ந்த IT அதிகாரிகள் – ஜவுளிக்கடை மூடல்..!

    April 10, 2026

    கோவை தேர்தல் களம் 2026: 10 தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

    April 10, 2026

    குடிபோதையில் அராஜகம்.. பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ரகளை; தட்டிக்கேட்டவருக்கு நேர்ந்த கதி..!

    April 10, 2026

    கோவை: 40°C-ஐத் தொடும் வெயில்! ஏப்ரல் 12 வரை ‘ஹீட்வேவ்’ எச்சரிக்கை – பொதுமக்கள் கவனத்திற்கு!

    April 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    வரி ஏய்ப்பு புகார்?.. 10 இடங்களில் ஒரே நேரத்தில் பாய்ந்த IT அதிகாரிகள் – ஜவுளிக்கடை மூடல்..!

    April 10, 2026

    2026 தமிழ்ப் புத்தாண்டு: உங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டிய எளிய பூஜைகள்!

    April 7, 2026

    “மும்பையின் ராஜா.. ஐபிஎல்-ன் மகாராஜா!” – மும்பை இந்தியன்ஸில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த ரோஹித் ஷர்மா!

    April 11, 2026

    ஜனநாயகன் லீக் – விஜய்க்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் நட்சத்திரங்கள்..!

    April 11, 2026

    கோவை தெற்கு: செந்தில்பாலாஜி vs அம்மன் அர்ஜுனன் – ‘ஸ்டார்’ தொகுதியில் உச்சகட்டப் பரபரப்பு!

    April 11, 2026
    Don't Miss

    ஹெல்த்டெக் & பயோடெக்: 2026-31 காலக்கட்டத்தில் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கும் ‘சூப்பர்’ துறைகள்!

    April 11, 2026

    2026-31 காலக்கட்டத்தில் அதிக வேலைவாய்ப்புகளை வழங்கவுள்ள ஹெல்த்டெக் மற்றும் பயோடெக் துறைகள், அதற்கான முக்கிய படிப்புகள் மற்றும் சம்பள விவரங்கள் குறித்த முழுமையான வழிகாட்டி.

    ஜியோ-ஹாட்ஸ்டாரில் ‘சாட்ஜிபிடி’ புரட்சி! இனி பேசினாலே போதும்.. உங்களுக்குப் பிடித்த படங்கள் ரெடி!

    April 11, 2026

    கோவை தெற்கு: செந்தில்பாலாஜி vs அம்மன் அர்ஜுனன் – ‘ஸ்டார்’ தொகுதியில் உச்சகட்டப் பரபரப்பு!

    April 11, 2026

    அடிக்கடி சண்டை வருகிறதா?.. இந்த ஒரு பொருளை உங்கள் பாத்ரூமில் வையுங்கள்..!

    April 11, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions
    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.