2026-2027ஆம் நிதியாண்டுக்கான இடைக்காலப் பட்ஜெட் இன்று காலை 9:30 மணி முதல் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
நடப்பு ஆட்சியின் கடைசி பட்ஜெட் இது என்பதால் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் தற்போது இடைக்கால மற்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

2026-2027ஆம் நிதியாண்டுக்கான இடைக்காலப் பட்ஜெட் குறித்து விரிவாக பார்க்கலாம்.
தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் 2026
- நகராட்சி நிர்வாகத் துறைக்கு ரூ.28,827 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- ஊரக வளர்ச்சித் துறைக்கு ரூ.28,687 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- மருத்துவத் துறைக்கு ரூ.22,090 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- தொழிலாளர் நலத் துறைக்கு 1,996 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- தொழில் துறைக்கு ரூ.4,882 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- காவிரி, வைகை, நொய்யல், தாமிரபரணி ஆறுகளில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, கரையோரம் பூங்கா ஆகியவை அமைத்து நதிக்கரை மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள ரூ.374 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

- சிறு, குறு நடுத்தர தொழில் துறைக்கு ரூ.1,943 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- ரூ.8,363 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது.
- ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு ரூ.3934 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- நீர்வளத்துறை, மின்சாரத்துறை, போக்குவரத்துத்துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- நீர்வளத்துறை – ரூ.10,076 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- மின்சாரத்துறை – ரூ.18,091 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- போக்குவரத்துத்துறை – ரூ.13,062 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- சென்னை விமானநிலையம் – கிளாம்பாக்கம், ஸ்ரீபெரும்புதூர் – சுங்குவார்சத்திரம், கோயம்பேடு – ஆவடி மெட்ரோ வழித் தடங்களுக்கு கொள்கைரீதியான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்திற்கு ரூ. 17,088 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.21,132 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- உணவு பாதுகாப்புத்துறைக்கு ரூ.17,068 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- சுற்றுலாத்துறைக்கு ரூ.1.394 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ.1,634 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

