கோவை விமான நிலையத்தில் 65.99 லட்சம் மதிப்பிலான சிகரெட், இ-சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை சர்வதேச விமான நிலையத்தில், விமான பயணிகளிடம் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் மத்திய புலனாய்வுத் துறையினர் நடத்திய சோதனையில், ஷார்ஜாவில் இருந்து கோவை வந்த விமானப் பயணிகளிடம் இருந்து கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

மொத்தம் 11 விமானப் பயணிகளிடம் இருந்து 3 லட்சத்து 48 ஆயிரம் சிகரெட்டுகள், 895 இ-சிகரெட்டுகள், மேலும் 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.65 லட்சத்து 99 ஆயிரம் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பொருட்கள் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட பயணிகளிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. கடத்தல் முயற்சிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக விமான நிலையங்களில் சோதனைகள் தொடர்ந்து கடுமையாக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

