2010 ஆம் ஆண்டு ஜம்முனாடி நாதம் என்ற தெலுங்கு படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர் டாப்ஸி. அதனை தொடர்ந்து, வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களை ஈர்த்தார்.

அதன் பிறகு, ஆரம்பம், காஞ்சனா 2, வந்தான் வென்றான், வை ராஜாவை, கேம் ஓவர், அனபெல் சேதுபதி ஆகிய படங்களிலும் நடித்திருந்தார். இதில், அவர் கடைசியாக நடித்த படம் விஜய் சேதுபதியுடன் நடித்த அனபெல் சரியாக ரீச் ஆகவில்லை.

தற்போது, இந்தி சினிமாவில் கவனம் செலுத்துவரும் டாப்ஸி பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை டாப்ஸியிடம் உங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர் யார் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, அதில் மோடி மற்றும் ராகுல் காந்தி என்று கேப்ஷன் கொடுக்கப்பட்ட நிலையில் அவர் மோடியை தனது பிடித்து தலைவர் என்று கூறியுள்ளார்.

மேலும், அவரைக் காட்டிவிட்டு கையெடுத்து கும்பிட்டு ஐயா சாமி நான் இன்னும் இந்தியாவில் வாழ ஆசைப்படுகிறேன் என்று நகைச்சுவையாக கூறியிருந்தார். டாப்ஸி கூறிய இந்த கருத்து வைரலான நிலையில், டாப்ஸி ஒரு வேலை ராகுல் காந்தியை தேர்வு செய்திருந்தால் அதன் விளைவு வேறு மாதிரி இருக்கும் என்று நெட்டிசன்களும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

